உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நிலைமண்டில ஆசிரியப்பா)

66

"பொறையன் செழியன் பூந்தார் வளவன் கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை

பாவை முத்தம் பல்லிதழ்க் குவளை

மாயோண் முறுவல் மழைப்பெருங் கண்ணே

யா. வி. பக். 379

இது மூன்றாம் சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் நிரல் நிறுத்தமையால், கீழ்க்கதுவாய் நிரல் நிறை.

66

(இன்னிசை வெண்பா)

அடல்வேல் அமர்நோக்கி நின்முகம் கண்டே

உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும் தடமதியம் ஆமென்று தாம்'

- யா. வி. 51. மேற்.

என்பது நான்கு சீர்க்கண்ணும் நிரல் நிறுத்தமையால், முற்று நிரல் நிறை.

66

இரண்டும் நான்கும் எட்டும் இரட்டியும்

இரண்டடி ஓரடி முச்சீர் இருசீர்

நிரந்த முறைமையின் நீர்த்திரை போல்வரின்

அம்போ தரங்கமென் றறிந்தனர் கொளலே”

இதுவும் அது.

இனி, ஒருசார் ஆசிரியர்.

“பகற்செய்யும் செஞ்ஞாயிறும்

இரவுச் செய்யும் வெண்டிங்களும்”

மதுரைக்காஞ்சி, 7-8.

என இவ்வாறு வருவனவற்றை முரண் நிரல் நிறை என்று

வேண்டுவர்.

“நிரல்நிறை தானே,

வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச் சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையும்"

என்பது நிரல் நிறைக்கு இலக்கணம்.

(உ) சுண்ண மொழி மாற்று வருமாறு:

(இன்னிசை வெண்பா)

- தொல். எச்ச. 9.

66

‘சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய

யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப

கானக நாடன் சுனை

- யா. வி. 59 மேற்.

யா. கா. 43 மேற்