உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இன் - ஐந்தாவதன் உருபு; வாங்கல்-' அதன் வயிற்கோடல்;

“நனியென் கிளவி மிகுதிப் பொருட்டே”

என்றாராகலின்,2 ‘நனி' என்றதற்கு ஈண்டு ‘மிகவும்’ எனப் பொருள் கொண்டார். ஒடு - உடனிகழ்ச்சி.

'வகுத்தோன் தவத்தோன்,' என்று கூட்டுக. ஏகாரம்,

ஈற்றசை.

சிறப்புப் பாயிரம்

தெய்வ வணக்கம்

வெறிகமழ் தாமரை மீமிசை ஒதுங்கிய

3அறிவனை வணங்கி அறைகுவன் யாப்பே.

என்பது சூத்திரம்.

நூல் நுதலியது உரைக்குமிடத்து நூலாமாறும், நூலின் விகற்பமும், “நூல்” என்ற சொற்குப் பொருளும், நூலாற் பயனும் உரைத்து உரைக்கற் பாற்று.

நூலாவது,

66

'முதல்நடு இறுதி மறுதலைப் படாது

தொகைவகை விரியின் உட்பொருள் தோன்ற

உரையோடு புணர்ந்த ஒழுக்கிற் றாகிச் சூத்திரம் ஒத்துப் படலம் பிண்டமென் றியாப்புறுத் தமைத்த *அவயவத் தாகி”

நடப்பது. என்னை?

1.

“நூலெனப் படுவது நுவலுங் காலை

முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்

தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

உண்ணின் றகன்ற உரையோடு பொருந்தி

நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே

- (தொல். செய். 166)

அதன் வயிற் கோடலாவது “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு, முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்” துக்கோடலாம்.

2. நனியாப்புற என்றதற்கு மிகவும் திண்ணிதாக” என்று கூறிய பொருளை.

3. அறிவன் அருகன். அவன் திருப் பெயர்களில் ஒன்று ‘பூமிசை நடந்தோன்' என்பது. மற்றொன்று 'கமல ஊர்தி' என்பது. ஒதுங்குதல்- நடத்தல்.

(பாட வேறுபாடு) *அவய வத்தாய் *முதல்நடு விறுதி.