உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

'அதுவே தானும் ஈரிரு வகைத்தே” “ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த ஒத்தி னானும் பொதுமொழி *கிளந்த படலத் தானும் 'மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானுமென்

27

- (தொல். செய். 167)

றாங்கனை மரபின் இயலும் என்ப”

-(தொல். செய். 168)

என்றார் தொல்காப்பியனார் ஆகலின்.

அவற்றுட் சூத்திரமாவது, கருதிய பொருளைக் கைக் கொண்டு கண்ணாடியில் நிழல் போலத் தெரிவுறத் தோன்றச் செய்யப்படுவது. என்னை?

66

அவற்றுள், சூத்திரந் தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே

என்றாராகலின்.

- (தொல். செய். 169)

ஓத்தாவது, ஒப்புடைப் பொருளை ஓரிடத்துள் ஒற்றுமைப்

பட வைப்பது ஆகும். என்னை?

"நேரின மணியை ’நிரல்பட வைத்தாங்

கோரினப் பொருளை ஒருவழி வைப்ப

தோத்தென மொழிப உயர்மொழிப் புலவர்”

(தொல். செய். 170)

என்றாராகலின்.

UL லமாவது, வேற்றுமையுடைய பல பொருள்களால் தோற்றம் உடைத்தாகத் தொடர வைப்பது என்னை?

“ஒருநெறி இன்றி 3விரவிய பொருளாற்

பொதுமொழி தொடரின் அதுபடலம் ஆகும்"

என்றாராகலின்.

- (தொல். செய். 171)

பிண்டமாவது, உறுப்பு மூன்றும் உள்ளடக்கி, நெறிப்பாடு

உடைத்தாய்க் கிடப்பது. என்னை?

1. மூன்றுறுப் படக்கிய பிண்டமாவது சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றும் அடக்கிய தொகுதி.

2. நிரல்

வரிசை ; ஒழுங்கு. 3. விரவுதல் – கலத்தல்

(பா. வே.) *தொடரிய.