உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

766

>இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின் தோன்றுமொழிப் புலவர் அது பிண்டம் என்ப

என்றாராகலின்.

- (தொல். செய். 172)

இனி, நூலின் விகற்பம் உரைக்குமாறு: நூல் முத்திறப்படும்: முதல் நூலும், வழி நூலும், சார்பு நூலும் என. என்னை?

66

முதல்வழி *சார்பென நூல்மூன் றாகும்

என்றாராகலின்.

- நன்னூல். 6

முதல் நூலாவது, குற்றம் கெடுத்து முற்ற உணர்ந்த நற்றவத்தோன் சொற்றதாகும். என்னை?

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்”

என்றாராகலின்

- தொல். மரபு. 96

வழி நூலாவது, முதல் நூலோடு ஒத்த முடிவிற்றாய்த் தனது ஓர் விகற்பப்படக் கிடப்பது. என்னை?

"முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப் பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி

அழியா மரபினது வழிநூல் ஆகும்”

என்றாராகலின்.

- நன்னூல் 7

2 சார்பு நூலாவது, அவ்விருவர் நூலுள்ளும் ஒரு வழி முடிந்த பொருளை ஓர் ஆசிரியன் யாதானும் ஓர் உபகாரம் நோக்கி ஒரு கோவைப்பட வைப்பது. என்னை?

"இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித் திரிபுவே றுடையது புடைநூல் ஆகும்” என்றாராகலின்.

நன்னூல் 8

3நான்காவது ‘எதிர் நூல்' என்பதும் ஒன்று உண்டு. யாது அது? முதல்வன் நூலுள் முடிந்த பொருளை ஓர் ஆசிரியன் யாதானும் ஒரு காரணத்தாற் பிறழ வைத்தால், அதனைக் 1. வாளாதே மூன்றுறுப் படக்கிய பிண்டம் என்றான் மேல். ஈண்டுச் சூத்திரமும் ஓத்தும் படலமும் கூறிய அதிகாரத்தானே அம்மூன்றனையும் அடக்கி நிற்பது பிண்டம் என்கின்றான் என்பது தொல்காப்பியம் என்பது பிண்டம். அதனுள் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பன படலம் எனப்படும். அவற்றுள் ஓத்தும் சூத்திரமும் ஒழிந்த இருகூறும் எனப்படும். தொல். பேரா.

2, 3. இறையனார் களவியல் ௧. உரை காண்க.

(பா.வே.) *புடையென.