உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

29

கருவியால் திரிபு காட்டி ஒருவாமை வைத்ததற்கு ஒள்ளியோன் ஒரு புலவனான் உய்க்கப்படுவது. என்னை?

66

"தன்கோள் நிறீஇப் பிறன்கோள் மறுப்ப தெதிர் நூல் என்ப ஒருசா ரோரே’

என்றாராகலின்.

- இறையனார் 1. மேற்

இனி, ‘நூல்’ என்ற சொற்குப் பொருள் உரைக்குமாறு: நூல் போறலின், ‘நூல்' எனப்படும். என்னை? பாவை போல் வாளைப் ‘பாவை' என்றாற்போல. 'யாதோ நூல் போலுமாறு?' எனின், நுண்ணிய பலவாகிய பஞ்சின் நுனிகளால் கைவல் மகடூஉ தனது செய்கை நலம் தோன்ற மாண்பினால் ஓர் இழைப் படுத்தல் அன்றே உலகத்து நூல் நூற்றலாவது? அவ்வாறே, 1 சுகிர்ந்து பரந்த 2சொற்பரவைகளால் பெரும்புலவன் தனது உணர்வு மாட்சியிற் சூத்திரம், ஒத்து, படலம், பிண்டம் என்னும் யாப்பு நடைபடக் கோத்தலாயிற்று நூல் செய்தலாவது. அவ்வகை நூற்கப்படுதலின், நூலெனப்படும்.

இனி, நூலாற் பயன் உரைக்குமாறு: நூல் கேட்டு விளங்கிய நுண்ணுணர்வினோன், அபாயம் இல்லாததோர் உபாயத்தினால் அறம், பொருள், இன்பம், வீடு என இவற்றை நிரம்புமாறு அறிந்து நிகழ்த்துவானாம். அதனாற் பகரப்பட்ட நான்கினையும் 3பாரம்பரத்தால் பனுவலே பயப்பதாயிற்று எனக் கொள்க.

1. எழுத்து ; (தொகை, வகை, விரி).

இனி, நூல் நுதலியது உரைக்குமாறு: 4சிறப்பெழுத்து, 5உறுப்பெழுத்து என்னும் தொகையானும்;

ஒற்று, உயிர், உயிர்மெய்யும் என்னும் வகையானும்;

உயிரும், மெய்யும், உயிர் மெய்யும், குறிலும், நெடிலும், அள படையும், வன்மையும், மென்மையும், இடைமையும், குற்றிய லிகரமும், குற்றியலுகரமும், ஆய்தமும், ஐகாரக் குறுக்கமும், ஔகாரக் குறுக்கமும், மகரக் குறுக்கமும் என்னும் விரியானும்;

2. அசை ; (தொகை, வகை, விரி).

நேரசை, நிரையசை என்னும் தொகையானும்;

1. சுகிர்ந்து - பிளவுபட்டு. 2. பரவை

3. பாரம்பரம் - முறைமை, மரபு.

4. ஓரெழுத்து ஒருமொழியாய் நிற்பது.

கடல்; வழக்குமாம்.

5. பல எழுத்துக்களுடன் கூடிச் சொற்கு உறுப்பாய் நிற்பது.