உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

வரலாறு:

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(இன்னிசை வெண்பா)

“எஃகொ டவன்காப்ப ஏமார்ந்தாள் போதந்தாள் அஃகுநீர்க் கான்யாற் றயன்மணல் எக்கர்மேல்; இஃதோநின் பாவை திருந்தடி ; பின்றை அஃதோ விடலை அடி

எனக் கொள்க.

அகப்பாட்டு வண்ணம் என்பது முடியாதது போன்று

முடிவது என்னை?

66

'அகப்பாட்டு வண்ணம்,

முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே"

- தொல். செய். 222.

என்றாராகலின்.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“பன்மீன் உணங்கற் படுபுள் ஒப்பியும் புன்னை நுண்டாது நம்மொடு தொகுத்தும் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றித் தோளி னீங்காமை சூளிற் றேற்றியும் மணந்ததற் கொவ்வான் தணந்துபுற மாறி இனையன் ஆகி ஈங்குனைத் துறந்தோன் பொய்தல் ஆயத்துப் பொலந்தொடி மகளிரொடு கோடுயர் வெண்மணல் ஏறி

ஓடுகலம் எண்ணும் துறைவன் தோழி!”

எனக் கொள்க.

- இலக். விளக். 757. மேற்.

புறப்பாட்டு வண்ணம் என்பது, முடிந்தது போன்று

முடியாததன் மேற்று. என்னை?

“புறப்பாட்டு வண்ணம்,

முடிந்தது போன்று முடியா தாகும்

என்றாராகலின்.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“நிலவுமணல் அகன்றுறை வலவன் ஏவலின்

எரிமணிப் புள்ளினம் மொய்ப்ப நெருநலும்

வந்தன்று கொண்கன் தேரே இன்றும்

தொல். செய். 223.