உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

யாரோ தாமே வாழா மோரே;

ஊரூர் பாகா ! தேரே;

பீரூர் தோளாள் பேரூ ராளே'

431

- இலக். விளக். 757. மேற்.

எனக் கொள்க.

குறுஞ்சீர் வண்ணம் என்பது, குற்றெழுத்துப் பயின்று வருவது என்னை?

“குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்”

- தொல். செய். 219.

என்றாராகலின்.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“உறுபெயல் எழிலி தொகுபெயல் பொழியச் சிறுகொடி அவரை *பொதிதளை அவிழக் குறிவரு பருவம் இதுவென மறுகுபு செறிதொடி நலமிலை அழியல்

அறியலை அரிவை கருதிய பொருளே"

என்க கொள்க.

இலக். விளக். 757. மேற்

சித்திர வண்ணம் என்பது, குற்றெழுத்தும் நெட் டழுத்தும் விராய் வருவது. என்னை?

“சித்திர வண்ணம்,

நெடியவும் குறியவும் நேர்ந்துடன் வருமே'

என்றாராகலின்.

வரலாறு:

66

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“ஊர வாழி ஊர தேர தார வாரி பேர சேரி

தொல். செய். 220.

கார வேரி பாய வாரி

பீர நீர தோழி தோளே'

எனக் கொள்க.

நலிபு வண்ணம்

என்பது, ஆய்தம்

உடைத்தாய்

வருவது. என்னை?

66

“நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்

- தொல். செய். 221.

என்றாராகலின்.

1. ஆய்தம் உள்ளதன் நுணுக்கம். ஆய்தம் - நுண்ணிய - நலிந்த ஒலியாகலின் நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும் என்றார். தொல். உரி. 32. காண்க.

(பா. வே) *பொரிதளை, *நெறிதளை.