உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

வரலாறு:

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை வெண்பா)

கூடுவார் கூடல்கள் கூடல் எனப்படா;

கூடலிற் கூடலே கூடலும் ;- கூடல் அரும்பிய முல்லை அரும்பவிழு மாலைப் பிரிவிற் பிரிவே பிரிவு’

எனக் கொள்க.

இலக். விளக். 757. மேற்.

உருட்டு வண்ணம் என்பது, அராகத் தொடைமேல்

வருவது. என்னை?

“உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்”

என்றாராகலின்.

தொல். செய். 230.

வரலாறு:

66

(வண்ணக ஒருபோகு)

(அராகம்)

'அணிகிளர் சிறுபொறி அவிர் துத்தி மாநாகத் தெருத்தேறி துணியிரும் பனிமுந்நீர் *தொட்டுழந்து மலைந்தனையே; ஆர்கலி உயரகல் எழில்வானத் தமரர்கணம் உடனார்ப்ப *வார்புனல் இகன்மிகல மறமல்லனை மாய்க்கலிற் பொங்கினை; முள்ளெயிற் றரிமருள்கண் ஆய்த்தியரொடு நிரைநடுங்க வரைதிரள் நிமிர்தடக் கையினனி மலையெடுத் தேந்தினை;

இஃதராகம்.

காமருதகைய கல்லியல் மார்பினை:

கண்பொரு சுடரொளி நேமியை;

பூமலி வினைபுனை தாரினை;

பொன்புனை வினைபுனை உடுக்கையை;

இது பேரெண்.

அனையன.

இது தனிச்சொல்.

பலவுடன் புகழ்தகப் பயந்தோய் ! நின் இணைபுணர் கழலடி பரவுதும்

துணைபுணர் உவகையொடு மன்னுதும் எனவே” - யா. வி. 93. மேற்.

இது சுரிதகம்.

எனக் கொள்க.

(பா. வே) *தோட்டவிழ்ந்து மலர்ந்தனையே. *வார்புகல் கழன்மறவர்.