உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

437

முடுகு வண்ணம் என்பது, அடியற்றவுழி அறியலாகாதாய், நீண்ட அடித்தாய், அராகம் தொகுத்து வருவது. என்னை?

66

'முடுகு வண்ணம் முடிவறி யாமல்

அடியிறந் தொழுகும் அதனோ ரற்றே”

என்றாராகலின்.

- தொல். செய். 231.

வரலாறு:

(அராகம்)

“பெருகலி யொலிமலி துணையணி பிறழத் துயல்வியல் வளனுரை பிதிர அதிரும் மதிவிலங் குருளுடை இருண்முந்நீர்

அருங்கலம் கவர்ந்தனையே; வகைதகை வளர்தளிர் உறுதுயர் வணரிணர் துணர்புயல் புகையணங் குறுசினை வினவா வினவில் உயர்வ ராயின்

வினைபடக் கிடந்தோய்! நின் சூழுறு சுடரொளி திகழணி மணியலங் கிலங்கவிர் கதிர்முத்தமொ

டுறழந்தியாத்த தொடையமை துணைபுனை வினை தொடுகழல் அடியிணை பரவுதும் யாமே

எனக் கொள்க.

99

இவ்வாறு வண்ண விகற்பம் எடுத்து ஓதினார் தொல் காப்பியனாரும் கையனாரும் முதலாக உடையார்.

அவிநயனார், தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை ச வண்ணம், மயங்கிசை வண்ணம் என்ற இவ்வைந்தினையும்; அகவல் வண்ணம், ஒழு கிசை வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்ற இந்நான்கினையும்; குற்றெழுத்து வண்ணம், நெட்டெழுத்து வண்ணம், வல்லெழுத்து வண்ணம், மெல்லெழுத்து வண்ணம், இடையெழுத்து வண்ணம் என்ற இவ்வைந்தினையும் கூட்டி உறழ, நூறு வண்ணம் பிறக்கும் என்றார்.

அவை உறழுமாறு:

தூங்கிசை வண்ணம் 20 (அகவல் :)

குறில் அகவல் தூங்கிசை வண்ணம், நெடில் அகவல் தூங்கிசை வண்ணம், வலி அகவல் தூங்கிசை வண்ணம், மெலி அகவல் தூங்கிசை வண்ணம், இடை அகவல் தூங்கிசை வண்ணம் எனவும்,