உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“பறைபட் டனபட் டனசங் கினொலி முறைவிட் டனவிட் டனமுன் னுலவாத் திறைவிட் டனர்கொட் டினர்திண் கலிமா

நிறைகொட் டினரொட் டினர்நீள் முழவால் ல

وو

இன்னவும் குறில் வல்லிசை ஏந்திசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க.

(கலிநிலைத் துறை)

"மான்வீடு போழ்திற் பிணையின் உயிர்போவ தேபோல் யான்வீடு போழ்தின் இதுவேகொல் நினக்கும் என்னத் தேனூறும் இன்சொல் மடவாய்! அழுதாற்ற கில்லாய் வானூடு போய வரைகா ணியசென்ற காலை'

என இன்னவும், 'உழவர் ஓதை’ (சிலப் . 7:4) எனப்படுவனவும் குறில் மெல்லிசை ஏந்திசை வண்ணம். இவற்றையும் ஐந் தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க.

66

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

கொடியிடை மாதர் மேனி குவளைமலர் உண்கண் என்றும் பிடிநடை மாதர் மாண்ட நடைதா னெனப்பேது எய்தும்

வடிவொடு வார்ந்த மென்றோள் வளை சேர்ந்த கைகாந்தள் என்றும் இடையிடை நின்று நின்று பலகாலும் உவப்ப தென்னோ!”

வளையாபதி. என்ன இன்ன பிறவும், எழுசீர் அடியால் வந்தனவும் எல்லாம் குறில் அகவல் அடுக்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத் தின்மேலும் ஒட்டிக்கொள்க.

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

“மாலையால் வாடையால் அந்திபால் மதியால் மனமுனம் உணர்வது நோயுறச் செய்த சோலையால் தென்றலால் சுரும்பிவர் பொழிலால் சொரிதரு காரொடு விரிதரு பொழுதே கோலவால் வளையாற் கொடுப்பறி யானேற்

கொள்வதும் உயிரொடு பிறரொடும் அன்றோ !

காலையார் வரவே காதலும் ஆங்கோர்

காலையென் னுங்கடல் நீந்திய வினையே”

என இன்னவும், பிறவும், எண்சீரடி மிக்கு வருவனவும் குறில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக் கொள்க.