உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

443

ஊழி நின்ற மதியான்மதி சேர்ந்து

வாழி என்று வணங்கவினை வாரா

என இன்னவை எல்லாம் மெல்லிசைத் தூங்கல் வண்ணம் எனப்படும். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக்

காள்க.

(தரவு கொச்சகம்)

“களவினாற் கொணர்ந்தவெண் காணமும் விழுப்பொன்னும் உளவெனினும் யான்றுய்ப்பல் உலவாது கிடந்தமையால் வளையினாற் பொலிந்தகை வாட்கண்ணாள் வழிப்படூஉம் கனைவாரிற் கனையிருட்கட் காணேன்மற் றிதுவல்லால்

என இன்னவும், கலிப்பாக்களும், தும்பிப்பாட்டும் குறில் அகவல் ஏந்திசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக்கொள்க.

66

(ஆசிரியத் துறை)

‘வரையென மாடங்கன் ஓங்குறு வீதியின் வஞ்சி மன்னவன் புரைபுரை நின்றலர் பூந்தொடை யற்பொறை யன்றா னருளானேற் கரையெனக் காலையும் காண்பரிய கடல்போலும் கௌவையும் அரையின மேகலை ஒட ஓடுமிவள் ஆவி ஆற்றாதே”

என இன்ன ஆசிரியத்துறை விருத்தங்களும், வெண் பாக்களும், வெள்ளொத் தாழிசைகளும் எல்லாம் குறில் ஒழுகல் ஏந்திசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக்கொள்க.

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“நெறிநீர் இருங்கரி நீலமும் *சூட்டாள்

பொறிமாண் வரியலவன் *ஆட்டலும் ஆட்டாள்

சிறுநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட்

கெறிநீர்த்தண் சேர்ப்பயான் என் சொல்லிச் *செல்கோ?"

துவும் அது.

(கலி விருத்தம்)

“இட்ட கன்றளை யானினி என்செய்கோ

கட்டெ ழில்லழ காகடி தென்னவே மட்டெ ழின்மலர்த் தார்பொலி மார்பனும் கெட்டெ ழுந்திறை கூறுவ னோவெனா'

(பா. வே) *சூடாள். *ஆடலும் *ஆடான். *சொல்கோ.