உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(கலி விருத்தம்)

“கோலமலர் கொண்டுசில மந்திமலை வுடைத்தாய்ச்

சோலைதொறுந் தாழ்ந்தபொழிற் சோர்வியலுயர் விஞ்சை

நீலமலர்க் கண்ணினவர் நீடுநனி ஏத்தச்

சீலமிகு நாதனடி சேரவினை சேரா

இன்னவும், வஞ்சியும், வஞ்சிப்பாவினமும் ஒழுகிசைத் தூங்கல் வண்ணம் எனப்படும். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக் கொள்க.

66

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

'ஏறுயர் கொடியின் இருவிசும் பதிரும்

எறிமுர சதிர்கடற் றானை

வீறுயர் மணிக்கால் வெண்குடை ஓங்கு

தண்டுறை யின்பழை யாற்று

மாறடு படிவ மதியுறு* நகருள்

மாதவன் ஏதமில் பாதம் வீறடு கதிகள் ஆழ்கதி*வீழ

விளங்கிய விழுத்துணை யாமே

என இச் சந்தத்தனவும்;

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

“பூவி னார்பொழிற் பிண்டியின்கீழ்ப்

பொருவறு திருநகர்ப் பொன்னெயிலுள்

மாவி னார்நலம் நோக்கினல்லார்

பலர்ப ணிந்துவந் தடிவணங்கி”

என இன்ன வண்ணத்தனவும் எல்லாம் வல்லிசைத் தூங்கல் வண்ணம் எனப்படும். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக் கொள்க.

(குறள்வெண் செந்துறை)

"தேனி னார்மலர்ப் பிண்டியி னீழற்றேவர் ஏத்த வானி னார்குடை யானடி நாளும் வணங்குதுமே”

66

(கலி விருத்தம்)

'தாழி ஓங்கு மலர்க்கண்ணவர் தண்ணடி

பாழி ஓங்கு புனலார்பழை யாற்றுள்

(பா. வே) *தருண. *நெறிக ளாற்கதி.