உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(வல்லிசை :)

441

குறில் வல்லிசை மயங்கிசை வண்ணம், நெடில் வல்லிசை மயங்கிசை வண்ணம், வலி வல்லிசை மயங்கிசை வண்ணம், மெலி வல்லிசை மயங்கிசை வண்ணம், வல்லிசை

மயங்கிசை வண்ணம் எனவும்;

(மெல்லிசை:)

டை

குறில் மெல்லிசை மயங்கிசை வண்ணம், நெடில் மெல்லிசை மயங்கிசை வண்ணம், வலி மெல்லிசை மயங்கிசை வண்ணம், மெலி மெல்லிசை மயங்கிசை வண்ணம், டை மெல்லிசை மயங்கிசை வண்ணம் எனவும் இவை குறில் அகவல் மயங்கிசை வண்ணம் முதலிய இருபது மயங்கிசை வண்ணம்.

அவைதாம் நகரம் இரைந்தாற் போலவும், நாரை இசையும் ஆர்ப் பிசையும் இயமர இசையும் தேரைக் குரலும் போலவும் வரும்.

சூறைக்காற்றும் நீர்ச்சுழியும் போல வருவது, அகவல்

வண்ணம்.

நீரொழுக்கும் காற்றொழுக்கும் போல வருவது, ஒழுகல் வண்ணம்.

தோற்கயிறும் இரும்பும் திரித்தாற் போலவும், கன் மேற் கல் உருட்டினாற் போலவும் வருவது, வல்லிசை வண்ணம். அன்ன நடையும் *தன்னம்பறையும் போலவும், மணன் மேல் நடந்தாற் போலவும் வருவது, மெல்லிசை வண்ணம். இவை தொழில் வகையால் ஒரு புடைஒப்புமைகாட்டியவாறு. இவை நூறு வண்ணமும் தம்முள் மயங்கி வரினும், மிக்க தனாற் பெயர் கொடுத்து வழங்கப்பெறும்.

வரலாறு:

(கலி நிலைத்துறை)

“வினையொழி பொழுதின்கட் செல்வமே போல அஃகிச் சுனையெழு குவளையும் ஆம்பலும் தீய்ந்து வாடிக் கனையெரி கழைதீண்டிக் காடுவெந் *தோடு கில்லா நனைகவுள் எழில்வேழம் நாவசைந் தெய்தி யாங்கு

இன்னவும், ஆசிரியங்களும், பாவைப்பாட்டும், அன்ன பிறவும் குறில் அகவல் தூங்கிசை வண்ணம் எனப்படும். இவற்றை ஐந்தெழுத்தின் மேலும் 'ஒட்டிக் கொள்க.

1. ஈண்டு ‘ஐந்தெழுத்து' என்றது, 'குறில், நெடில், வலி, மெலி, இடை' என்பவற்றை.

(பா. வே) *தண்ணம்பறையும். *ஓடுகல்லா.