உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

பிரிந்திசை வண்ணம் 20 (அகவல்:)

குறில் அகவல் பிரிந்திசை வண்ணம், நெடில் அகவல் பிரிந்திசை வண்ணம், வலி அகவல் பிரிந்திசை வண்ணம், மெலி அகவல் பிரிந்திசை வண்ணம், இடை அகவல் பிரிந்திசை வண்ணம் எனவும்;

(ஒழுகல்:)

குறில் ஒழுகல் பிரிந்திசை வண்ணம், நெடில் ஒழுகல் பிரிந்திசை வண்ணம், வலி ஒழுகல் பிரிந்திசை வண்ணம், மெலி ஒழுகல் பிரிந்திசை வண்ணம், இடை ஒழுகல் பிரிந்திசை வண்ணம் எனவும்;

(வல்லிசை:)

குறில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், நெடில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், வலி வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், மலி வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், இடை வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் எனவும்;

(மெல்லிசை:)

குறில் மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், நெடில் மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், வலி மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், மெலி மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், இடை மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் எனவும் இவை குறில் அகவல் பிரிந்திசை வண்ணம் முதலிய இருபது பிரிந்திசை வண்ணம்.

அவைதாம் பெருங்குதிரைப் பாய்த்தலும், ஒன்று கொட்டியும் இரண்டு கொட்டியும் முதலாக உடையறுத்துக் கொட்டுப் போலவும் வரும்.

மயங்கிசை வண்ணம் 20 (அகவல் :)

குறில் அகவல் மயங்கிசை வண்ணம், நெடில் அகவல் மயங்கிசை வண்ணம், வலி அகவல் மயங்கிசை வண்ணம், மெலி அகவல் மயங்கிசை வண்ணம், இடை அகவல் மயங்கிசை வண்ணம் எனவும்;

(ஒழுகல்:)

குறில் ஒழுகல் மயங்கிசை வண்ணம், நெடில் ஒழுகல் மயங்கிசை வண்ணம், வலி ஒழுகல் மயங்கிசை வண்ணம், மெலி ஒழுகல் மயங்கிசை வண்ணம், இடை ஒழுகல் மயங்கிசை வண்ணம் எனவும்;