உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(மெல்லிசை :)

439

குறில் மெல்லிசை ஏந்திசை வண்ணம், நெடில் மெல்லிசை ஏந்திசை வண்ணம், வலி மெல்லிசை ஏந்திசை வண்ணம், மெலி மெல்லிசை ஏந்திசை வண்ணம், இடை மெல்லிசை ஏந்திசை வண்ணம் எனவும் - இவை குறில் அகவல் ஏந்திசை வண்ணம் முதலிய இருபது ஏந்திசை வண்ணம்.

அவைதாம் மதயானை நடந்தாற் போலவும், பாம்பு பணைத்தாற் போலவும், ஓங்கிப் பறக்கும் புட்போலவும் வரு மெனக் கொள்க.

அடுக்கிசை வண்ணம் 20

(அகவல்:)

குறில் அகவல் அடுக்கிசை வண்ணம், நெடில் அகவல் அடுக்கிசை வண்ணம், வலி அகவல் அடுக்கிசை வண்ணம், மெலி அகவல் அடுக்கிசை வண்ணம், இடை அகவல் அடுக்கிசை வண்ணம் எனவும்;

(ஒழுகல்:)

குறில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம், நெடில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம், வலி ஒழுகல் அடுக்கிசை வண்ணம், மெலி ஒழுகல் அடுக்கிசை வண்ணம், இடை ஒழுகல் அடுக்கிசை வண்ணம் எனவும்;

(வல்லிசை:)

குறில் வல்லிசை அடுக்கிசை வண்ணம், நெடில் வல்லிசை அடுக்கிசை வண்ணம், வலி வல்லிசை அடுக்கிசை வண்ணம், மெலி வல்லிசை அடுக்கிசை வண்ணம், இடை டை வல்லிசை அடுக்கிசை வண்ணம் எனவும்;

(மெல்லிசை:)

குறில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம், நெடில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம், வலி மெல்லிசை அடுக்கிசை வண்ணம், மெலி மெல்லிசை அடுக்கிசை வண்ணம், இடை மெல்லிசை அடுக்கிசை வண்ணம் முதலிய இருபது அடுக்கிசை

வண்ணம்.

அவை வ தாம் ஒவ்வா நிலத்திற் பண்டி உருண்டாற் போலவும், நாரை நாரை இரைத்தாற் போலவும், தாராவும் தார்மணி ஓசையும் போலவும் வரும்.