உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை ஆசிரியப்பா)

வாளை மேய்ந்த வளைகோட்டுக் குதிரை

கோழிலை வாழைக் கொழுமடல் உறங்கும்

ஊரன் செய்த கேண்மை

தேரை வாலினும் பெரிதா கின்றே

இதுவும் பொருள் இன்மையாற் பொருள் வழு ஆயிற்று. (4) யாப்பு வழுவாவது, யாப்பதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை?

“யாப்பின் வழுவே யாப்பின திலக்கணம் கோப்ப வாராக் கோவைத் தாகும்”

என்றாராகலின்.

வரலாறு:

66

குமண ! வாழி ! குமண உமணர்

உப்பிற் றேய்கநின் பகையே ; யான்சில பெருமை வேண்டி வந்தேன்;

நீநின் பெருமை வேண்டின் தா

இப்பாட்டு முதல் எடுத்துக்கொண்ட ஓசையிற்கெட்டுப் பின் பரவிக் கட்டுரையால் வந்தமையால், யாப்பு வழு.

பிறவும் அன்ன.

அறுத்து இசைப்பும், வெறுத்து இசைப்பும், அகன்று இசைப்பும் என்னும் ஓசைக் குற்றம் வருமாறு:

(குறளடி வஞ்சிப்பா)

“வீங்குமணி விசித்த விளங்குபுனை நெடுந்தேர்

காம்புநீடு மயங்குகாட்டுள்

பாம்புபெரிது வழங்குதோ றோங்கு

வயங்குகலிமா நிரைபுநிரைபு

வலவன்,

வாம்பரி கடவி வந்தோன்

கெழூஉமணி அகலம் தழூஉமதி விரைந்தே”

இது நாலசைப் பொதுச்சீர் பலவும் வந்து வஞ்சி தூங்கினமை யின், அறுத்திசைப்பு என்னும் குற்றம் ஆயிற்று.

66

(நேரிசை வெண்பா)

'ஓங்கிலை வேலோன் ஒளியால் அளிபெற்ற

பூந்துழாய் போன்றேமும் யாமேமற் - றேய்ந்து

1. இச்செய்யுள் எட்டு ஆசிரிய உரிச்சீரும் வந்த பாட்டுக்கு உதாரணமாகப் பின்னர் இவ்வுரையாசிரியராற் காட்டப்பட்டுள்ளது.