உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

அடிசில் பருகி அணியார்த்துப் போந்தான் கொடிமதிற் கோழியார் கோ'

449

இதனுள், இசையெல்லாம் ஆர்ப்ப எனவும், ‘எழிற்றானை நாப்பண்' எனவும், அடிசில் அயின்று’ எனவும், ‘அணி அணிந்து போந்தான்' எனவும் இவ்வாறு பொதுவினால் எடுத்துக் காண்டு பொதுவினால் முடித்தற்பாலனவற்றைப் பொதுப் பெயரால் எடுத்துக் கொண்டு சிறப்பு வினையான் ஒன்றற்கே உரிய சொற்புணர்த்தமையான். சொல் வழு ஆயிற்று. என்னை? “வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்'

6 எனவும்,

“வேறுவினை யுடைய பொதுவினை கிளப்பப்

பொதுவினை யுடைய வேற்றுமை உண்டோ?'

எனவும் கூறினாராகலின்.

- தொல். சொல். 46.

(3) பொருள் வழுவாவது, பொருளதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை?

“பொருளின் வழுவே தமிழ்நடைத் திரிவே"

என்றாராகலின்.

வரலாறு:

(நேரிசை வெண்பா)

“முன்னும் தொழத்தோன்றி முள்ளெயிற்றாய் ! அத்திசையே

இன்னும் தொழத்தோன்றிற் றீதேகாண் - மன்னும் பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போற் பெருகொளியால் மிக்க பிறை”

இது நாண நாட்டம்.

“பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட் கண்டிக் களிற்றை அறிவன்மற் - றிண்டிக் கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய் ! உதிரம் உடைத்திதன் கோடு:”

இது நடுங்க நாட்டம்.

- தொல். பொ. 114. மேற்.

- (சிற்றெட்டகம்)

இவை இரண்டும் பொருளதிகாரத்தோடு மாறு கொண்டன.

என்னை?

“நாணவும் நடுங்கவும் நாடாள் தோழி காணுங் காலைத் தலைமகள் தேத்து”

என்றாராகலின்.