உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(கட்டளைக் கலித்துறை)

“தூங்கேந் *தடுக்குப் பிரிதல் மயங்கிசை வைத்துப்பின்னும் ஆங்கே அகவல் ஒழுகல் வலிமெலிப் பாற்படுத்துப் பாங்கே குறில் நெடில் வல்லிசை மெல்லிசை யோடிடையும் தாங்கா துறழ்தரத் தாம்வண்ணம் நூறும் தலைப்படுமே"

எனக் கொள்க.

யா. கா. 43. மேற்.

இனி, 'வழு' என்பது, குற்றம். அது நான்கு வகைப்படும்: எழுத்து வழுவும், சொல் வழுவும், பொருள் வழுவும், யாப்பு வழுவும் என.

அவற்றுள் (1) எழுத்து வழுவாவது, எழுத்ததிகாரத் தோடு மாறு கொள்வது.

வரலாறு:

(நேரிசை வெண்பா)

“வெறிகமழ் தண்சிலம்பின் வேட்டமே அன்றிப் பிறிதும் குறையுடையான் போலும் - செறிதொடீஇ தேமான் இதணத்தான் நாமாக நம்புனத்தே மாமான்பின் வந்த மகன் !”

என இதனுள், ‘தேமா’ எனற்பாலதனைத் “தேமான்’ என னகர ஒற்றுக் கொடுத்தமையால், எழுத்து வழு ஆயிற்று.

66

என்னை?

"முன்னிலை நெடிலும் ஆவும் மாவும் னம்மிகப் புணரும் இயங்குதிணை யான

என்றாராகலின்.

(2) சொல் வழுவாவது, சொல்லதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை?

“சொல்லின் வழுவே சொல்லோத்து மரபிற் சொல்லிய குற்றம் தோன்ற லான

என்றாராகலின்.

வரலாறு:

(நேரிசை வெண்பா)

66

“இசையெல்லாம் கொட்ட எழிற்றானை ஊர்ந்து

வசையிலா மன்னர்வந் தேத்த - இசையும்

  • தடுக்கல்.