உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

ஆங்கவள் அருகல் அல்லாள் அத்தின புரத்தி ராசன் வான்புகழ் மங்கை வாகைப் பூநிறம் அன்ன மேனி"

447

என இன்னவை எல்லாம் குறில் அகவல் மயங்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க.

(கட்டளைக் கலித்துறை)

“ஆசைப் படுவ அருந்தவம் கல்வி ; அல் *லாப்பிறகள்! பேசப் படுவ திலம் ; இவை யாவை பிறப்பிறப்பாம்

தேசத் தியற்கை தெரிந்துணர் வாருக்குச் சேயிழைமார் பாசப் படுகுழிப் *பற்றறுத் தார்வினைப் பற்றறுத்தார்”

என இன்னவை எல்லாம் குறில் ஒழுகல் மயங்கிசை வண்ணம் இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக்கொள்க. (கலி நிலைத்துறை)

“தாமத் தூண்களைத் தருக்கொடு முருக்குதல் முரணும் தூமத் தூவகல் எடுத்துக்கொண் டுழையவர் எறியும்

வாமத் தோள்களின் வலித்தனன் புடைத்தெடுத் தரற்றும் பேய்மைத் தீத்தொழில் பெருகிய தரசனும் உணர்ந்தான்’

என இன்னவை எல்லாம் குறில் வல்லிசை மயங்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக்கொள்க.

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

“உருகா தார்தம் இன்னுயிர்காத் தொழிய லாமோ உணர்ந்தார்க்கு வருகார் போல வளஞ்சுரந்திவ் வையம் காக்கும் வயமாறன் முருகார் ஆர மார்பினான் முரசம் ஆர்ப்ப முல்லைகாள் !

குருகார் பௌவம் உண்டிருண்ட கொண்டல் என்று குழைத்தீரோ?”

எனவும்,

6

66

'கண்ணுடையா ரவர்கண்டார் கண்ணில்புண் பிறவெல்லாம்"

எனவும் இன்னவை எல்லாம் குறில் மெல்லிசை மயங்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. இவற்றில் ஒரு வண்ணத்தாலேயும் பல வண்ணத்தாலேயும் வரும். இப் பெற்றியே கடையில்லா விகற்பமாம். அவற்றை ஒரு விகற்பத்தாற் சொன்னவாறு. பிற வகையால் வரும் வண்ணங் களையும் ஒரூஉ வண்ணங்களையும் உரைத்தவற்றோடு ஒருபுடை ஒப்புமையாற் சார்த்தி உணர்க.

என்னை?

(பா. வே) *லாப்பிறர்கள். *பாற்றறுத்.