உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

பத்துவகைக் குற்றத்திற்றீர்ந்து, பத்துவகை மாண்பிற்றாய்ப் பதின்மூன்று வகையாக உரை பெற்று, முப்பத்திரண்டு தந்திர உத்தியொடு புணர்ந்து வருவது.

அவற்றுள், மூன்றுவகையாவன, தந்திரம், சூத்திரம், விருத்தி என இவை.

மூவரின் நடைபெறலாவது, அம்மூன்றும் நடாத்துவார் மூவர் ஆசிரியர் எனக் கொள்க.

நால்வகைப் பயனாவன. 'அறம், பொருள், இன்பம், வீடு

என்பன.

எழுவகை ஆசிரியர் மத விகற்பமாவன, 2“உடம்படுதல் மறுத்தல் என்பன முதலாக உடை யன எனக் கொள்க.

366

பத்துவகைக் குற்றமாவன, குன்றக்கூறல்' முதலாக உடை யன எனக் கொள்க.

பத்துவகை மாண்பாவன, 4சுருங்க வைத்தல் முதலாக உடை யன எனக் கொள்க.

பதின்மூன்றுவகை உரையாவன. 5"சூத்திரம் தோற்றல்' யன எனக் கொள்க.

முதலாக உடை

1.

அறம்பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே. 2. எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோள் ஒருதலைத் துணிவே பிறர் நூற் குற்றங் காட்டல் ஏனைப் பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே.

3.

குன்றக் கூறல் மிகைபடக் கூறல்

- நன்னூல், 10.

- நன்னூல், 11.

4.

கூறியது கூறல் மாறு கொளக் கூறல்

வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்

சென்றுதேய்ந் திறுதல் நின்றுபய னின்மை

வெற்றெனத் தொடுத்தல மற்றொன்று விரித்தல்

என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே.

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்

நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்

ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல்

முறையின் வைப்பே உலகமலை யாமை

விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த

தாகுதல் நூலிற் கழகெனும் பத்தே.

- நன்னூல், 12.

- நன்னூல், 13.

5. சூத்திரந் தோன்றல், சொல் வகுத்தல், சொற்பொருள் உரைத்தல், வினாதல் விடுத்தல், விசேடங் காட்டல், உதாரணங் காட்டல், ஆசிரிய வசனங் காட்டல், அதிகார வரவு காட்டல், தொகுத்தல் (முடித்தல், விரித்துக் காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்த்தல்.

- யா. வி. பாயிரம்.