உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

முப்பத்திரண்டு தந்திர உத்தியாவன: “நுதலிப் புகுதல், ஓத்துமுறை வைப்பே, தொகுத்துக் சுட்டல், வகுத்துக் காட்டல், முடித்துக் காட்டல், முடிவிடம் கூறல், தானெடுத்து மொழிதல், பிறன்கோட் கூறல், சொற்பொருள் விரித்தல், இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல், எடுத்த மொழியின் எய்த வைத்தல் இன்ன தல்ல

66

திதுவென மொழிதல், தன்னினம் முடித்தல், எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல், மாட்டெறிந் தொழிதல் பிறநூல் முடிந்தது தானுடம் படுதல் தன்குறி வழக்கம் மிகவெடுத் துரைத்தல், இறந்தது விலக்கல், எதிரது போற்றல், முன்மேற் கோடல், பின்னது நிறுத்தல், எடுத்துக் காட்டல், முடிந்தது முடித்தல், சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல், தொடர்ச்சொற் புணர்த்தல் யாப்புறத் தமைத்தல், உரைத்தும் என்றல், விகற்பத்து முடித்தல், தொகுத்துடன் முடித்தல், ஒருதலை துணிதல், உய்த்துணர வைத்தல்”

அதுவே தானும் ஈரிரு வகைத்தே

وو

“ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும், இனமொழி கிளந்த ஓத்தி னானும். பொதுமொழி கிளந்த படலத் தானும்,

453

- நன்னூல், 14.

- தொல். செய். 168.

மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும்என்

றாங்கனை மரபின் இயலும் என்ப”

- தொல். செய். 169.

66

அவற்றுள்,

சூத்திரந் தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றிப் பொருணனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே”

தொல். செய். 170.