உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

"நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை ஒருவழி வைப்ப தோத்தென மொழிப உயர்மொழிப் புலவர்”

- தொல். செய். 171.

“ஒருநெறி இன்றி விரவிய பொருளாற் பொதுமொழி தொடரின் அதுபடலம் ஆகும்”

- தொல். செய். 172.

தொல். செய். 173.

“மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின்,

தோன்றுமொழிப் புலவர் அதுபிண்டம் என்ப”

இவை நூலும், சூத்திரமும்., ஓத்தும், படலமும், பிண்டமும் ஆமாறு சொன்னவாறு.

இவை எல்லாம் முன் சொல்லிப் போந்தன அன்றோ?" (யா. வி. 1) எனின், உரைப்பான் புகுகின்றுழி ‘இது நூலாமாறு,’ என்று காட்டிற்றல்லது, இந்த நூலுட் சூத்திரத்தின் பொருள் என்று அப்பொழுது சொல்லிற்றில்லை எனக் கொள்க.

“உரையொடு நூலிவை அடியில் நடப்பினும், வரைவில என்ப வாய்மொழிப் புலவர்”

1‘“மொழி~பிசி’முதுசொல் மூன்றும் அன்ன

என்றார் பல்காயனார்.

“உரையும் நூலும் அடியின்றி நடப்பினும், வரைவில என்ப வயங்கி யோரே’

“வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங் காமுரை மூன்றும் அன்ன என்ப”

என்றார் நற்றத்தனார்.

1. வாய்மொழி, அடுத்துவரும் நற்றத்தனார் நூற்பாவில் வாய்மொழி எனவருதல் காண்க. 2. "ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும்,

3.

தோன்றுவது கிளந்த துணிவி னானும்,

என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே” – தொல். செய். 176.

'அவை பிறைகவ்வி மலை நடக்கும்' என்பது ஒப்பொடு புணர்ந்த உவமம். இஃது யானையென்றாவது.

“நீராடான் பார்ப்பான் நிறஞ்செய்யான் நீராடில் ஊராடும் நீரிற்காக் கை” என்பது தோன்றுவது கிளந்த துணிவினான் வந்தது. இது நெருப்பென்றாவது. பேரா.

“நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்

ஒண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப

""

- தொல். செய். 177. உரை காண்க.