உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

என்னை?

"நேர்நேர் நிரைநேர் ஆயிரு சீரும் நேர்முத லாகவும் நிரைமுத லாகவும் நான்கென மொழிப வெண்பா உரிச்சீர்”

என்பவாகலின்.

வரலாறு:

பூவாமா, பூவிரிமா, விரிபூமா, நறுவடிமா

எனக் கொள்க.

மாசெல்வாய், மாபடுவாய், புலிசெல்வாய், புலிபடுவாய்

எனினும் ஒக்கும்.

இனி,

னி, வஞ்சி உரிச்சீர் ஆவன, வண்பா உரிச்சீர் அல்லாத மூவசைச் சீர் அறுபதும் எனக் கொள்க.

என்னை?

“வெண்பா உரிச்சீர் அல்லா மூவசை எல்லாம் வஞ்சி உரிச்சீர் ஆகும்”

என்பவாகலின்.

அவற்றிற்கு உதாரணம்:

(இன்னிசை வெண்பா)

“மாபுலி பாம்பு களிறென் றிவைமுதலாச் சேல்படு போகு வழங்கென் றிவைநடுவா வாய்சுரம் காடு கடறீறா வைத்தாரே பாசுரம்வஞ் சிக்குரிச் சீர்”

தன் வழியே உறழ்ந்தால், அறுபத்து நான்கு மூவசைச் சீராம். (‘செல்' என்பது, முதல் நீண்டது) அவற்றுள் நான்கு வெண்பா உரிச்சீரும் ஒழித்து, அல்லாத அறுபதும் வஞ்சி உரிச்சீர்க்கு உதாரணமாம் எனக் கொள்க.

அவை சொல்லுமாறு:

'மாசெல்வாய், 2மாபடுவாய், மாபோகுவாய், மாவழங்குவாய்;

3புலிசெல்வாய், 'புலிபடுவாய், புலிபோகுவாய், புலிவழங்குவாய்; பாம்புசெல்வாய், பாம்புபடுவாய், பாம்புபோகுவாய், பாம்புவழங்குவாய்; களிறுசெல்வாய், களிறுபடுவாய், களிறுபோகுவாய், களிறுவழங்குவாய்; என இவை நேர் ஈறாக வந்த பதினாறும்,

“மாசெல்சுரம், மாபடுசுரம், மாபோகுசுரம், மாவழங்குசுரம்;

புலிசெல்சுரம், புலிபடுசுரம், புலிபோகுசுரம், புலிவழங்குசுரம்;

1-4 இவை வெண்பா உரிச்சீர்; ஒழிந்த அறுபதும் வஞ்சியுரிச்சீர்.