உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

473

இனி, உரிச்சீர் மூன்று வகைப்படும்: ஆசிரிய உரிச்சீரும் வெண்பா உரிச்சீரும், வஞ்சி உரிச்சீரும் என.

என்னை?

"ஆசிரிய உரிச்சீர் வெண்பா உரிச்சீர் வஞ்சியொடு மூன்றே உரிச்சீர்த் தோற்றம்"

என்பவாகலின்.

அவற்றுள், ஆசிரிய உரிச்சீர் எட்டு வகைப்படும்: 'நேர்பும், நிரைபும் மயங்கிய நான்கும், 2நேர்பும் நிரைபும் நிரை இறுதி யாகிய இரண்டும், 3தலைநிலை அளபெடைப்பின் நிரை வந்த தும், 'இறுதி நிலை அளபெடைப்பின் நிரை வந்ததும் என. என்னை?

“உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர்; நிரையிறு காலையும் அதனோ ரற்றே” எனச்சொன்னாராகலின்.

66

அவற்றிற்கு உதராணம்:

‘வீடுபேறு, மாறுகுருகு, வரகுசோறு, முருட்டுமருது

எனவும்,

நீடுகொடி, குழறுபுலி

எனவும்,

தூஉமணி, கெழூஉமணி

எனவும் கொள்க.

(கட்டளைக் கலித்துறை)

"நேர்பும் நிரைபும் மயங்கிய நான்கும் நிரையிறுவாய் நேர்பும் நிரைபும் முதலிய சீர்களும் நேர்நிரையாய்ச் சேரும் அளபெடைப் பின்னிரை சேரிரு சீரொடெட்டும் ஆரும் அறிவுற ஓதினர் ஆசிரி யக்கவையே

என இதனை விரித்து உரைத்துக் கொள்க.

இனி, வெண்பா உரிச்சீர் நான்கு வகைப்படும்: 5நேர் நேரும் நிரைநேரும் ஆகிய இரண்டுசீர் முதற்கண்ணும் முறையானே நேரும் நிரையும் புணர்ப்ப அவை தோன்றும்.

1. நேர்புநேர்பு நேர்புநிரைபு நிரைபுநேர்பு நிரைபுநிரைபு.

2. நேர்நிரை நிரைபுநிரை.

-

3. தலைநிலை முதல்நிலை. தூஉமணி (நேர்பூஉ நிரை)

4. கெழூஉமணி. (நிரைபூஉ நிரை)

5. நேர்நேர்நேர், நேர்நிரைநேர் நிரைநேர்நேர், நிரைநிரைநேர்.