உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472

>இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“ஈரசை கொண்டது சீரெனப் படுமே;

மூவசை இறத்தல் இல்லென மொழிப”

என்பவாகலின்.

என.

ஆகச் சீர் இரண்டு வகைப்படும்; இயற்சீரும் உரிச்சீரும்

அவற்றுள், இயற்சீர் பத்து வகைப்படும் ; 'நேரசையும் நிரையசையும் மயங்கின நான்கு சீரும், 2நேர்பு நிரைபு *முதலாக நேரசை இறுதியாகிய இரண்டு சீரும், 3நேரசைப் பின்னும் நிரையசைப் பின்னும் நேர்பசையும் நிரைபசையும் வந்து ஆகிய நான்கு சீரும் என.

என்னை?

“இயலசை மயக்கம் இயற்சீர் ஆகும்; உரியசைப் பின்னர் நேரியல் காலையும்

இயற்சீர்ப் பால;

இயலசை இறுதி வரூஉம் உரியசை

இயற்சீர்ப் பால ஆகும் என்ப

என்றாராகலின்.

அவற்றிற்கு உதாரணம்:

தேமா, புளிமா, பாதிரி, கணவிரி

எனவும்,

போதுபூ, விறகுதீ,

எனவும்,

போரேறு, பூமருது, கடியாறு, மழகளிறு எனவும் கொள்க.

(கட்டளைக் கலித்துறை) “நேரும் நிரையும் மயங்கிய நான்கென்ப ; நேரிறுவாய் நேர்பும் நிரைபும் முதலியற் சீர்களும், நேர்நிரைப்பின் நேர்பும் நிரைபும் நிலவிய நான்கும் நிரைவளைத்தோள் நேர்நுண் குழல்மட வாய் ! இயற் சீரென்று நேர்ந்தனரே” இதனை விரித்து உரைத்துக் கொள்க.

1 நேர்நேர் நிரைநேர் நேர்நிரை நிரைநிரை.

2. நேர்புநேர் நிரைபுநேர்.

3.

நேர்நேர்பு நேர்நிரைபு நிரைநேர்பு நிரைநிரைபு. (பா. வே) முதலாகிய.