உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

471

முற்றியலுகர நிரைபசைக்கு உதாரணம், 'உருமு, அரவு, விரவு, செலவு என வரும்.

நேர் முதலாகிய இரு வகை உகரமும் ஒற்று அடுப்பினும் நேர் பசையாகும்.

நிரை முதலாகிய இருவகை உகரமும் ஒற்று அடுப்பினும் நிரைபசையாகும். என்னை?

“குற்றிய லுகரம் முற்றிய லுகரம் ஒற்றொடு தோன்றற் குரிய வாகும்”

என்பவாகலின்.

அவற்றிற்கு உதாரணம்:

'சேற்றுக்கால், ஆட்டுக்கால், எனவும், 'களிற்றுத்தாள், வெளிற்றுப்பனை' எனவும் இவை குற்றியலுகரம் ஒற்றொடு வந்த நேர்பசை நிரைபசைகள்.

‘மின்னுப்பூண், மண்ணுச்சாந்து எனவும், ‘உருமுத்தீ, வெருவுப் பாம்பு, விரவுப்பூண், விழவுக்களம்' எனவும் இவை முற்றியலுகரம் ஒற்றொடு வந்த நேர்பசை நிரைபசைகள்.

(கட்டளைக் கலித்துறை)

6

“குறிலும் நெடிலும் குறிலிணை தானும் குறில்நெடிலும் நெறிநின் றுயிர்ப்பினும் நேர்ந்தொற் றடுப்பினும் நேர்நிரையென் றறி; முந்தை நேர்நிரை ஐந்தீ ருகரம் அடுத்து வந்தால் நெறிநுண் கருங்குழல் ! நேர்பும் நிரைபும்; 'ஒற்றோடு' மற்றே”

இதனை விரித்து உரைத்துக் கொள்க.

66

“நேரோ ரலகு ; நிரையிரண் டலகு;

நேர்புமூன் றலகு; நிரைபுநான் கலகென்

றோதினர் புலவர் உணரு மாறே”

- யா. வி. 5. மேற். (அவிநயம்)

நேரசையும் நிரையசையும் 'இயல் அசை' எனப்படும்; நேர்பசையும் நிரைபசையும் 'உரியசை' எனப்படும். என்னை? முதலிரண் டியலசை; ஏனைய உரியசை’”

என்பவாகலின்.

அவ்வசை இரண்டு கூடியும் சீராம் ; மூன்று கூடியும் சீராம்.

என்னை?