உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அவற்றுள், நேரசை நான்கு வகைப்படும் : தனிநெடிலும், தனிக்குறிலும், நெட்டெழுத்தும், குற்றொற்றும் என. என்னை?

“தனிநெடில் தனிக்குறில் ஒற்றொடு வருதலென் றந்நால் வகைத்தே நேரசை என்ப'

وو

- யா. வி. 8. மேற்.

(நற்றத்தம்)

என்பவாகலின். அதற்கு உதாரணம், 'கா ரி, சேந் தன்' என வரும். நிரையசை நான்கு வகைப்படும்: குறில் இணையும், குறில் நெடிலும், குறில் இணை ஒற்றும், குறில் நெடில் ஒற்றும் என.

என்னை?

“குறிலிணை குறில்நெடில் ஒற்றொடு வருதலென் றந்நால் வகைத்தே நிரையசை என்ப”

- யா. வி. 8. மேற். (நற்றத்தம்)

என்பவாகலின். அதற்கு உதாரணம், ‘பல, பலா, பலம், கிழான்' என வரும்.

நேர்பசை, நிரைபசை ஆமாறு சொல்லுதும்: நேர் முதலாகிய குற்றிய லுகரம் நேர்பு அசையாம் ; நிரை முதலாகிய குற்றியலுகரம் நிரைபு அசையாம். என்னை?

என்னை?

“நேர்முத லாகிய குற்றிய லுகரம்

நேர்பென மொழிப ; நிரைமுதல் நிரைபே”

என்பவாகலின்.

நேர்பு அசைக்கு உதாரணம், 'கோடு, தோன்று, குன்று’ என வரும்.

நிரைபு அசைக்கு உதாரணம், 'மரபு, மயங்கு, மலாடு, மலாட்டு என வரும்.

நேர் முதலாகிய முற்றியலுகரமும் நிரை முதலாகிய முற்றியலுகரமும் நேர்பசையும் நிரைபசையுமாம்.

"முற்றிய லுகரம் வரினுமவை பெயரே

என்பவாகலின்.

முற்றியலுகரமாவது, மெல்லெழுத்தும் இடையெழுத் தும் சார்ந்து வரும் உகரம்.

முற்றியலுகர நேர்பசைக்கு உதாரணம், 'காணு, வேணு, மின்னு. மண்ணு' என வரும்.