உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியுள்,

யாப்பருங்கலம்

469

“சிறுகுடி யீரே ! சிறுகுடி யீரே!”

கலித்தொகை 39: 12.

என அளவடியால் தனிச்சொல் வந்தது. அதற்கு இலக்கணம்,

(இன்னிசை வெண்பா)

“வெண்சீர் வரைவின்றிச் சென்று விரவினும்

தன்பால் மிகுதி இனமெல்லாம் வஞ்சி

உரிச்சீர் விரவுதல் வெண்பாவிற் கில்லை தனிச்சொல் அசைச்சீர் அடி”

என்பதனை விரித்து உரைத்துக்கொள்க.

இவ்வகையே நாலசைச்சீர் வேண்டாமே நடாத்தும் உபாயம் கண்டாராயினும், இவ்வாறு உரைப்பின் உணர் வினார்க்கு அன்றி அறிய ஒண்ணாது ஆதலானும், பழைய நூல் வழி நில்லாது தமது மதம்பிடித்துச் சொன்னார் என்னும் பாதுகாவலானும்.

(குறள் வெண்பா)

"உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு”

திருக்குறள் 425.

என்ப ஆகலானும், காக்கை பாடினியார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் மாப்பெரும் புலவர்தம் மதம்பற்றி நாலசைச்சீர் விரித்தோதினார் இந்நூலுடையார் எனக் கொள்க.

(நேரிசை வெண்பா)

“நேர்பும் நிரைபசையும் நேராதே நாலசைச்சீர் சேரும் சிறிதென்று செப்பாதே - பாரின்மேல்

தென்றமிழ்நூல் யாப்புரைத்தான் சிந்தைபோல் நுண்ணிதே

இன்றமிழ்போல் நல்லாள் இடை

99

இனி, நாலசையும், பத்து இயற்சீரும், எட்டு ஆசிரிய உரிச்சீரும், நான்கு வெண்பா உரிச்சீரும், அறுபது வஞ்சி உரிச்சீரும் ஆமாறு சொல்லுதும்.

எழுத்தினால் ஆக்கப்படும் அசை நான்கு வகைப்படும். நேரசையும் நிரையசையும், நேர்பு அசையும், நிரைபு அசையும்

என.

என்னை?

"நேரே நிரையே நேர்பே நிரைபென ஈரிரண் டென்ப அசையின் பெயரே”

என்றாராகலின்.

6

– யா. வி. 5. மேற்.