உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

டின்னா என்றி ராயின்,

இனியவோ பெரும ! தமியேற்கு மனையே?” - குறுந்தொகை, 124.

இதன் முதற்கண் நாலசைச்சீர் வந்ததன்றோ?' எனின், அஃது ஐஞ்சீர் அடியாக ன வைப்பினும், குற்றுகரத்தை ஒற்றாகக் கொண்டு நாற்சீர் அடியாக வைப்பினும்

நாலசைச்சீர் அன்றாம்.

“இனியிரந்து வாங்கின்” என்னும் அடியினும் மூன்றாஞ் சீர்க்கண் நாலசைச்சீர் வந்தது எனினும், ஆண்டுக் குற்றுகரத்தை ஒற்றாகக் கொள்ளவும். அளபெடையை அலகு காரியம் பெறாது என்று விலக்கவும், ஐஞ்சீர் அடி ஆக்கவும் நாலசைச்சீர் அன்றாம். (குறட்டாழிசை)

“கோடன்மன்னு பூங்கானக் குயில்கண்மன்னு நீள்சோலை நாடவரு *நம்மை நயந்து”

என இதனுள்ளும் நாலசைச்சீர் வந்தன எனின், அதனை முதலடி அறுசீராகவும் ஈற்றடி நாற்சீராகவும் அலகிட்டு அந்தடி குறைந்து வந்த தாழிசைக்குறள் என்று வழங்க நாலசைச்சீர் அன்றாம்.

(குறட்டாழிசை)

“காம்புதேம்பா வெற்பிற் கல்லையுள் வாழ்கின்ற பாம்பிற் கடிய புலி’

தனுள் முதலடிக்கண் நாலசைச்சீர் வந்தது பிற,' எனின், முதலடியை ஐஞ்சீர் அடியாகக் கொண்டு, ஈற்றடி குறைந்த தாழிசைக் குறளாகக் கொள்ள, நாலசைச்சீர் அன்றாம். நாலசைச்சீர் வேண்டும் ஒருசார் ஆசிரியரும், வெண்பாவினுள் அளபெழுந் தால் அன்றி நாலசைச்சீர் வாரா என்று இத்தொடக்கத்தன வற்றையும் தாழிசைக்குறளேயாகக் கொள்வர் எனக் கொள்க.

(வெளி விருத்தம்)

“கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால் - என்செய்கோயான் வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால் - என்கோயான் எண்டிசையும் தோகை இருந்தாவி ஏங்கினவால்

என்செய்கோயான்!'

யா. கா. 6. மேற். என்னும் வெளி விருத்தத்துள் 'என்செய்கோயான்' என்னு மதனை வகையுளி சேர்த்தவும் ஆகாதாய் நாலசைச்சீர் வந்தது பிற எனின், அதனைக் குறளடியால் வந்த தனிச்சொல் எனக் கொள்க.

1. கோடன் மன்னு என்பதை, தேமா, தேமா, எனவும் குயில்கண் மன்னு என்பதை, புளிமா, தேமா எனவும் ஆக்கி ஆறுசீராக்குதல். (பா. வே) மினியர்.