உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

இஉ இரண்டன் குறுக்கம் தளைதப நிற்புழி ஒற்றாம் நிலைமைய ஆகும்” “உயிரள பேழும் உரைத்த முறையான் வருமெனின் அவ்வியல் வைக்கப் படுமே"

என்றார் காக்கைபாடினியார்.

“சீர்தளை சிதைவுழி ஈருயிர்க் குறுக்கமும் நேர்தல் இலவே உயிரள பெடையும்

என்றார் மயேச்சுரர்.

“உயிரள பெடையும் குறுகிய உயிரின் இகர உகரமும் தளைதபின் ஒற்றாம்" “சீர்தப வரினும் ஒற்றியற் றாகும்” என்றார் அவிநயனார்.

(குறளடி வஞ்சிப்பா)

“கோவாமுத்திற் கண்பனிகால

வழுத்தாண்மார்வ பழுதறவஞ்சி

வாராவாரிருள் ஏரிழிந்தழிய

வளைவாய் தேய்ந்தனள் களைவருகாதலின்

ஆனாவழகி தானனிபுலம்பி

அழல்சேர்லமெழுகிற் கலுழ்வனள்கவல

வாராவிடினவள் ஆருயிரிழத்தலின்

பெரியவரியவள் பருவரல்பெருகலின் இனியே,

அல்ல குறிப்பினும் ஆகுவ

களவியல் வேண்டும் கடுப்பொடு மடுத்தே

467

-யா. கா. 37. மேற். 37.மேற்.

“முன்சொன்னதே அன்றி இவ்விருசீர் அடி வஞ்சிப்பாவினுள் நாலசைச்சீர் பதினாறும் வந்தன. பிறவெனின், அது வஞ்சிப்பா அன்று; அகவல் ஓசைத்தாய் நாற்சீர் அடியால் வந்தமையால், இயற்சீரால் வந்த நேரிசை ஆசிரியப்பாவாகக் கொள்ள நாலசைச்சீர் அன்றாம். தனிச்சொல் ஆசிரியத்துள்ளும் வரும்' எனக் கொள்க.

1.

(நேரிசை ஆசிரியப்பா)

1“உமணர்சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்கா

உப்பு வணிகர். உமணர் சேர்ந்து என்பதைப் புளிமா, தேமா என இரு சீராக்கி ஐஞ்சீராக்குதல். குற்றியல் உகரத்தை விலக்கப் புளிமாங்காய்' ஆமாதலால் நாலசைச்சீர் அன்றாம்.