உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466

66

>இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(கலி விருத்தம்)

தளையொடு சீர்தபின் தக்க ஆவிகள் அளபெடா ; எடுப்பினும் அலகு காரியம் விளைவில என்பவர் மீட்டும் நாலசை உளசில சீருமென் றுரைப்ப தென்கொலோ!”

இதன் கருத்து,

66

(நேரிசை வெண்பா)

தாஅய்த்தாஅய்ச் செல்லும் தளர்நடைப் புன்சிறார்

போஒய்ப்போஒய்ப் பூசல் இடச்செய்து - போஒய்ப்போஒய்

நிற்குமோ நீடு நெடும்புதவம் தானணைந்து

பொற்குமோ என்னாது போந்து

யா. வி. 60. மேற்.

இதனுள், மேற்சொன்ன பெற்றி அன்றியேயும் நாலசைச்சீர் வந்தன பிறவெனின், அற்றன்று;

(குறள் வெண்பா)

“நிலம்பாஅய்ப்பாஅய்ப் பட்டன்று நீலமா மென்றோள்

கலம்போஒய்ப்போஒய்க் கௌவை தரும்” - யா. வி. 4. 93. மேற். இத்தொடக்கத்தனவற்றுள், தளையும் சீரும் வண்ணமும் கெட நில்லாமையின் அளபெடா ; அளபெடுப்பினும், அலகு காரியம் பெறா என்று மூவசைச்சீராக வைப்பராகலானும், (குறள் வெண்பா)

66

காஅரி கொண்டான் கதச்சே மதனழித்தான்

ஆஅழி ஏந்தல் அவன்’

த்தொடக்கத்தனவற்றுள்.

"மாத்திரை வகையாற் றளைதப கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும்"

என்று தளை கெடாமற்பொருட்டு

அளபெடுத்து

வெண்டளை ஆக்குவர் ஆகலானும், இவ்வாறே ‘தாஅய்த்தாஅய்’ என்ற இத்தொடக்கத்தனவற்றுள்ளும் சீரும் தளையும் கெட்டு நில்லா ஆகலின், ஓர் அளபெடையை அளபெடாது என்று நெட் டெழுத்தே போலக் கொண்டு அலகிட மூவசைச் சீரேயாம். நாலசைச்சீர் கொள்வான் புகினும், உதாரண வாய்ப்பாட்டான் ஓசை யூட்டி வண்ணம் அறுக்கும்பொழுது சான்றோர் கோவை யுள் வெண்பாப் போல ஓசை உண்ணாது, செப்பலோசை வழுவும் என்பது.