உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

இயலும் படியுள தாவது நன்றன்றித் தோன்றியக்கால் அயிலுஞ்செவ் வேலும் அழலம்பும் ஆம்பிற ஆடவர்க்கே”

எனவும்,

66

இருநெடுஞ் செஞ்சுடர் எஃகமொன் றேந்தி இரவின்வந்த அருநெடுங் காதற்கன் றேதரற் பாலதல் லாதுவிட்டால் கருநெடு மால்கடல் ஏந்திய கோன்கயல் சூடும்நெற்றிப் பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண்கொடிக்கே”

465

யா. வி. 15. மேற். 6 எனவும், இத்தொடக்கத்துக் கலித்துறையுள் நாலசைச்சீர் வந்தன, பிறவெனின், அவை கலித்துறை அல்ல என்று சீர் சீராக இறுவழி அசைச் சீராக, ஆசிரிய விருத்தமாம்; பலரும் அவற்றை ‘விருத்தம்' என்று வழங்குவராகலின்,

எல்லா ஆசிரியரும், 'அசையும் ஒரோவழிச் சீராம்,' என்ப; “ஊர் அலரெழச் சேரி கல்லென

குறுந்தொகை, 262.

6 எனவும்,

(வஞ்சி விருத்தம்)

“உரிமை யின்கண் இன்மையால்

அரிமதர் மழைக் கண்ணாள்

செருமதி செய் தீமையால்

பெருமை *கொன்ற என்பவே

எனவும் காட்டுவர் ஆகலின் என்பது. "இசைநிலை நிறைய நிற்குவ *வாயின் அசைநிலை வரையார் சீர்நிலை பெறலே"

என்றார் தொல்காப்பியனார்.

"நேர்நிரை வரினே சீர்நிலை எய்தலும் பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி”

என்றார் அவிநயனார்.

"நேரும் நிரையும் சீராய் வருதலும்

சீரும் தளையும் சிதைவுழிக் கொளலும் யாவரும் உணர்வர் யாவகைப் பாவினும்”

என்றார் மயேச்சுரர்.

(பா. வே) *பொன்றும். *தாயின். *நால்வகைப்.

- யா. வி. 15. 21. மேற்.

யா. கா. 12. மேற்.

தொல். செய். 26.

- யா. வி. 14. மேற்.

- யா. வி. 14. மேற்.