உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

479

களிறுபடுவாய் என்னும் பத்து வஞ்சியுரிச்சீரும் புகப் பெறும் எனக் கொள்க.

என்னை?

(நேரிசை வெண்பா)

"இருநான் ககவற்சீர் ஈரைந் தியற்சீர் ஒருநான்கு வெள்ளைக் குரிச்சீர் - ஒருவாத மூவிருவான் வஞ்சிக் கவற்றுட் கலியகவற் பாவிரவற் பாலனவும் பத்து

எனவும்,

“மாசெல் புலிசெல் சுரங்காடு வான்கடறு பாசிழையாய்! பாம்பு களிற்றின்பின் - பேசிய செல்வாய் படுவாய் சிவணிய சீரிவையே பல்லோர் பயின்றுரைக்கும் பத்து”

எனவும்,

66

(இன்னிசை வெண்பா)

"நேர்நேர் நிரைநேர்ப்பின் நேரொழித்த ஈரசையும் சீரேற் றவற்றாதி நேர்பும் நிரைபசையும்

ஈரொன்றிற் சீரொன்றாய் இன்சீராம் வஞ்சிச்சீர் ஆசிரியத் துட்புகும் பத்து

எனவும்,

66

(குறள் வெண்பா)

"நிரைபாதி நேர்பாதி அந்தாதி நேர்நேர் நிரைநேரிற் சேர்ந்தவும் பத்து”

எனவும் வரும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

ஒழிந்த 'ஐம்பது வஞ்சியுரிச்சீரும் அகவலுட் புகப்பெறா எனக் கொள்க; கலியுள்ளும், அவ்வாறே எனக் கொள்க. வஞ்சி இறுதியுள்ளும் ஒத்தாழிசைக் கலியுள்ளும் 'தேமா, புளிமா என்னும் இரண்டு இயற்சீரும் புகப்பெறா ஒழிந்த சீர் எல்லாச் செய்யுளுள்ளும் புகப்பெறும்.

இனி, அசைச்சீராய் நின்றவிடத்துத் தளை வழங்கும் பொழுது நேரசைச்சீருக்கு மற்றும் ஓரலகு கொடுத்து நேர்நேர் ஆகவும், நிரையசைச்சீருக்கு மற்றும் ஓரலகு கொடுத்து நிரை நேர் ஆகவும், நேர்பு அசைச்சீருள் ஓரலகு களைந்து தேமா ஆகவும், நிரைபு அசைச் சீருள் ஓரலகு களைந்து புளிமா ஆகவும் வைப்பர் எனக் கொள்க.

1. மாசெல்சுரம் முதலாகக் கூறிய பத்துச்சீரும் ஒழிந்த ஐம்பது வஞ்சியுரிச்சீர்கள். (பக். 452)