உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அவற்றுள், தேமாவும் பாதிரியும் சிறுமை. ஐந்தெழுத் தடியினின்றும் பெருமை பதினேழெழுத்தடிகாறும் உரிமை யாய்ப் பதின் மூன்றடியும் ஒரோ ஒரு சீர் பெற இரண்டுமாய் இருபத்தாறாம்.

என்னை?

(குறள் வெண்பா)

“தேமாவும் பாதிரியும் *சிற்றெல்லை ஐந்தெழுத்தா

ஏறும் பதினே ழெழுத்து’

எனவும்,

66

‘ஒருசீர் பதின்மூன் றடிக்குரித் தாக இருசீரு மாயிருபத் தாறு

எனவும் சொன்னாராகலின்.

6

இனி, 'போதுபூ, போரேறு' என்னும் இரண்டு ஈரெழுத் துச்சீரும் ஆறெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின்காறும் உயர்பு ஒரோ ஒன்று பன்னிரண்டிற்கும் உரியவாக, இரண்டுமாக இருபத்து நான்கு அடியாம்.

என்னை?

(குறள் வெண்பா)

66

“ஆறெழுத் தாதி பதினேழு காறுயரும் போதுபூப் போரே றிவை

“ஒன்றிற்குப் பன்னிரண் டாக இருசீர்க்கும்

வந்த இருபத்து நான்கு

என்றாராகலின்.

இவ்விருபத்து நான்கும் முன் சொன்ன இருபத்தாறுமாய் ஈரெழுத்துச் சீராம் வழி ஆசிரிய அடித்தொகை ஐம்பது.

என்னை?

(குறள் வெண்பா)

“எடுத்துரைத்த ஈரெழுத்துச் சீரினா லாய

அடித்தொகை ஐம்ப தெனல்”

என்பவாகலின்.

இனி, மூவெழுத்துச் சீராவன, ஏழு சீர். அவையாவன. 'பாதிரி, புளிமா, விறகுதீ, போதுபூ, போரேறு, பூமருது, கடியாறு' என இவை.

என்னை?

(பா. வே) *சீறெல்லை.