உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(நேரிசை வெண்பா)

"குற்றுகரத் தோடு வருஞ்சீர் எழுத்தைந்தும்

முற்றுகர முற்றசீ ராமென்ப-தெற்றெனக் குற்றிகரத் தோடு வருஞ்சீர் எழுத்தைந்தும் முற்றிகர முற்றசீ ராம்

என்றாராகலின்.

483

ஆசிரியப்பாவிற்கு உரிய இருநூற்று அறுபத்தோரடியும்

ஆமாறு சொல்லுமிடத்து, ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் பதினாறாம்; இயற்சீர் பத்தும், தன் சீர் ஆறும் என. அவற்றுள் தன் சீர் ஆறும் தளை வகுக்கப்படாமையின் ஆறும் கொள்ளப்படா.

என்னை?

(நேரிசை வெண்பா)

“இயற்சீர் ஒருபதும் தன்சீரோர் ஆறும் இயற்றுப ஆசிரி யத்தென் - றியற்றுங்கால்

தன்சீர் வருமேல் தளைநோக்கார் மற்றொழிந்த இன்சீராற் கொள்வர் தளை”

என்பவாகலின்.

இயற்சீர் பத்துமே கொண்டு அடி வகுக்குமிடத்து நான்கு நிலைமையவாம், இரண்டெழுத்துச் சீரும், மூன்றெழுத்துச் சீரும், நான்கெழுத்துச் சீரும், ஐந்தெழுத்துச் சீரும் என.

66

என்னை?

(குறள் வெண்பா)

திரண்டியற்சீர் பத்திற்கும் நான்காம் நிலைமை இரண்டாதி ஐந்தீ றெழுத்து’”

என்பாவகலின்.

அவற்றுள், ஈரெழுத்துச் சீராவன, நான்காம். அவை யாவன, 'போதுபூ, போரேறு, பாதிரி, தேமா' என இவை.

என்னை?

(குறள் வெண்பா)

"ஈரெழுத்துச் சீராவ போதுபூப் போரேறு

பாதிரி தேமா இவை"

என்பவாகலின்.