உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஆசிரிய மருங்கின் ஐந்தும் உரிமையிற்

சீரிய வெள்ளைக் கலித்தளை வரினே

'நாலெண் வழுவோ டிரண்டென மொழிப”

என்றாராகலின்.

வெள்ளை நிலம் பத்தினுள்ளும் ஆசிரியத்தளை தட்பப் பத்தும், கலித்தளை தட்பப் பத்துமாய் வெண்பாவிற்கு இருபது தளை வழுவாம்.

என்னை?

“சிந்தோ டளவு நெடிலீ றொழிய வந்த உரிமை ஈரைந்து நிலத்தும்

2

மென்றளை கலியொடு தட்டன வெள்ளைக் கொன்றிய தளைவழு இருப தென்ப்”

என்றாராகலின்.

“மென்றளை' என்பது ஆசிரியத்தளை.

கலி நிலவும் எட்டினுள்ளும் வெண்டளை தட்ப எட்டும், ஆசிரியத் தளை தட்ப எட்டுமாய்க் கலிப்பாவிற்குப் பதினாறு தளை வழுவாம்.

என்னை?

“அளவிரு நிலத்தொடு நெடில்கழி நெடிலென

விரவும் இருநான் கெய்திய கலியினுள் மரபே வெள்ளை ஆசிரி யத்தளை

வரினும் வழுவகை ஈரெட் டாகும்”

என்றாராகலின்.

66

(குறள் வெண்பா)

"மூன்றிற்கும் சொன்ன முறையால் தொகுத்துணரத் தோன்றும் வழுவெழுப தாம்

99

வை 3 எழுபது தளை 6 ழுபது தளை வழுவாவன.

இவை

இனி, அறுநூற்று இருபத்தைந்து அடியும் காட்டுமிடத்துச் சீர் வரையறுக்கின்றுழிக் குற்றுகர இகரங்களை ஒற்றாகக் கொண்டு, முற்றுகர இகரங்களை எழுத்தாகக் கொண்டு வழங்கப்படும்.

1. முப்பத்துநான்கு. 2. தளைத்தன. 3. அகவல் தளைவழு 34, வெண்பாத் தளைவழு 20, கலிப்பாத் தளைவழு 16 ஆகத் தளைவழு எழுபதாம்.