உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஆசிரிய இணைக் குறட்டுறை; ஆசிரிய நிலை விருத்தம், ஆசிரிய மண்டில விருத்தம்; கலி ஒத்தாழிசை, கலித்தாழிசை, கலித் துறை, கலிவிருத்தம், கலிநிலைத்துறை, கலி மண்டிலத் துறை, கட்டளைக் கலித்துறை, கலி நிலை விருத்தம், கலி மண்டில விருத்தம், வஞ்சி நிலைத் தாழிசை, வஞ்சி மண்டிலத் தாழிசை, வஞ்சி நிலைத்துறை, வஞ்சி மண்டிலத்துறை, வஞ்சி நிலை விருத்தம், வஞ்சி மண்டில விருத்தம் என்னும் விரியானும்.

க்ஷ. ஓ சை ; (தொகை, வகை, விரி).

செப்பல், அகவல், துள்ளல், தூங்கல், கொஞ்சல் என்னும் தொகையானும்;

66

“பாஅ வண்ணம், தாஅ வண்ணம்,

வல்லிசை வண்ணம். மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணமோடு ஆங்கவை என்ப அறிந்திசி னோரே”

என்னும் வகையானும்;

- தொல். செய். 213

குறில் அகவல் தூங்கிசை வண்ணம் முதலாகிய 'வண்ணம் நூறு என்னும் விரியானும்;

2

சுருங்கியும் விரிந்தும் கிடந்த தொன்னூல் யாப்புக்களது துணிபு நோக்கி, அரும்பொருட் பெருங்கேள்வி ஆசிரிய வசனங் களை ஆலம்பனமாக அருங்கல அணி ஒருங்கு கோத்தாற் போலவும், அலை கடல் கடைந்து அமுது கொண்டாற் போலவும் 1. 'தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம் என்று இவ்வைந்தினையும் முதல் வைத்து, அகவல் வண்ணம், ஒழுகல் வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்று இந்நான்கினையும் இடைவைத்து, குறில் வண்ணம், நெடில்வண்ணம், வலிவண்ணம், மெலிவண்ணம், இடைவண்ணம் என்று இவ்வைந்தினையும் கடைவைத்துக் கூட்டியுறழ நூறு வண்ணமும் பிறக்கும்”. யாப். காரிகை. 43. உரை.

2. ஆலம்பனம் – பற்றுக்கோடு.