உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

35

ஒருங்கு கோத்து ஒரு கோவைப்படுத்து எல்லார்க்கும் உணர்வு புலன் கொள்ளுமாற்றல் யாப்பு உணர்த்துதல் நுதலிற்று. இதனானே இது சார்பு நூல் என்பது முடிந்தது.

இனி, 'இவ்வோத்து என் நுதலிற்றோ?' எனின், அசைக்கு உறுப்பாம் எழுத்துக்களது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று; அதனானே; ‘எழுத்தோத்து' என்பதாயிற்று.

இச்சூத்திரம் என் நுதலிற்றோ?' எனின்?' சிறப்புப் பாயிரம் உணர்த்துதல் நுதலிற்று என்னை?

66

'வணக்கம் அதிகாரம் என்றிரண்டும் சொல்லச் சிறப்பென்னும் பாயிரமாம்

என்றாராகலின்.

அச்சூத்திரப் பொருள் உரைக்கின்றுழிச் சூத்திரத்தின் விகற்பமும், ‘சூத்திரம்' என்ற சொற்குப் பொருளும் உரைத்து உரைக்கப்படும்.

சூத்திரம் ஆறு வகைப்படும்: பெயர்ச் சூத்திரம், விதிச் சூத்திரம், விலக்கியற் சூத்திரம், நியமச் சூத்திரம், அதிகாரச் சூத்திரம், ஞாபகச் சூத்திரம் என. 'பெயரே தொகையே' என்ப ஆகலின்.

அவற்றுள் பெயர்ச் சூத்திரமாவது, இடுகுறியானும் காரணக் குறியானும், பொது வகையானும் இலக்கணங்கட்கு ஓர் உபகாரம் நோக்கி, 'இஃது இதற்குப் பெயர்,' என்று இடுவது. விதிச் சூத்திரமாவது,

66

'இன்ன தொன்றிற் கிதுவாம் என்று முன்னில் லதனை மொழிவ தாகும்”.

விலக்கியற் சூத்திரமாவது, பொது வகையான் விதிக்கப் பட்டதனை அவ்வகை ஆகாது என்பது.

நியமச் சூத்திரமாவது, முன் ஒன்றனால் முடிய வைத்துப் பின்னும் அதனையே எடுத்துக் கொண்டு விதிமுகத்தான் விலக்குவதூஉம், விலக்கும் வகையான் விதிப்பதூஉம் ஆம் எனக் கொள்க.

அதிகாரச் சூத்திரமாவது, ஆற்றொழுக்கு, *அரிமான் நோக்கம், 'சார்ச்சி வழி ஒழுகுதல், தவளைப் பாய்த்து என்பவற்றுள் ஒன்று ஏற்கும் வகையால் இயைந்து பொருள் விளைப்பது.

1. சார்ச்சி

சாருதல்

(பா.வே) *அரிமா.