உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஞாபகச் சூத்திரமாவது, எளிதும் சிறிதுமாக இயற்றற் பாலதனை அரிதும் பெரிதுமாக இயற்றிப் பிறிதொரு பொருளை அறிவிப்பது.

1‘பரிபாடைச் சூத்திரம்' என்பனவும் உள. அவை ஈண்டுத் 2தந்திர உத்தியுள்ளே பட்டு அடங்கும் எனக் கொள்க.

இவற்றை விகற்பித்துப் பல படுத்துச் சொல்வாரும் உளர். முதற் சூத்திரம் நான்கு வகைப்படும்: வழிபடு தெய்வ வணக்கம் செய்தலும், மங்கல மொழி முதல் வகுத்து எடுத்தலும், தாகை வகை விரியால் நுதலிப் புகுதலும், சொல்லத் தகும் பொருளை எடுத்து உரைத்தலும் என.

இனிச் ‘சூத்திரம்' என்ற சொற்குப் பொருள் உரைக்குமாறு: “ஏற்புடைப் பொருளெலாம் தோற்று மாறு

சூத்திரித்து நடத்தலிற் சூத்திரம் எனப்படும்"

அது வடமொழித் திரிசொல் எனக் கொள்க. சூத்திரப் பொருள் உரைக்கின்றுழிப் பல திறத்தானும் உரைப்ப. என்னை?

“முத்திறத் தானும் மூவிரு விகற்பினும்,

பத்திவிதத் தானும் பதின்மூன்று திறத்தானும் எழுவகை யானும் இரண்டுகூற் றானும் வழுவுநனி நீங்க ’மாண்பொடும் 'மதத்தொடும் யாப்புறுத் துரைப்பது சூத்திர உரையே’

என்பது ஆதலின்.

99

அவற்றுள் முத்திறமாவன : பொழிப்பு, அகலம், நுட்பம் என இவை.

மூவிரு விகற்பமாவன, எடுத்துக் காட்டல், பதம் காட்டல், பதம் விரித்தல், பதப்பொருள் உரைத்தல், வினாதல், 5விடுத்தல் என இவை.

பத்து விதமாவன,

1. தெய்வ வணக்கஞ் செயலும் மங்கலமொழி முதல் வகுத்தலும் தொகை வகை விரியாய்ச் சொல்லலும் ஏற்புடைப் பொருளை யுரைத்தலும் என்னும் நான்கும் பரிபாடைச் சூத்திரமாம்.

2. நுதலிப் புகுதல் முதலாகிய முப்பத்திரண்டு உத்திகள். நன். 14.

3.

4.

மாண்பு- அழகு. 'சுருங்கச் சொல்லல்' முதலாகிய பத்துவகை. நன் 13.

உடன்படல், மறுத்தல் முதலாகிய நூன்மதங்கள் ஏழு. நன். 11.

5. விடை கூறல்.