உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(நேரிசை வெண்பா)

“சந்த எழுத்தலகிற் றள்ளி அரைசெய்து

'சந்த எழுத்தின் அரைகூட்ட - முந்துகுருப்

பாதத் தளவாகும் ; பாதமே மாறிவர ஏதமில் நான்கடிக்கும் எண்'

539

இவ்வுரைச் சூத்திரத்தின் கருத்தாவது: தான் வேண்டப் பட்ட சந்தத்தின் எழுத்துக்களை வருக்கித்து அரை செய்து, அவ்வருக்க மூலத்துட் சந்த எழுத்தின் அரை கூட்ட, அச்சந்தங்கள் அள , வெழுத்துச் சங்கையாம் ; அவற்றை நான்கினால் மாற, நான் கடிக்கும் எழுத்தாம்.

உத்தம்' என்னும் முதற்சந்தத்திற்கும் எழுத்து நான்கு ; இரண்டாவதற்கு எழுத்து எட்டு; மூன்றாவதற்குப் பன்னிரண்டு; நான்காவதற்குப் பதினாறு ; ஐந்தாவதற்கு இருபது ; ஆறாவதற்கு இருபத்துநாலு ; ஏழாவதற்கு இருபத்தெட்டு ; எட்டாவதற்கு முப்பத்திரண்டு ; ஒன்பதாவதற்கு முப்பத்தாறு ; பத்தாவதற்கு நாற்பது; பதினொன்றாவதற்கு நாற்பத்து நாலு; பன்னிரண்டா வதற்கு நாற்பத்தெட்டு, பதின்மூன்றாவதற்கு ஐம்பத்திரண்டு; பதினான்காவதற்கு ஐம்பத்தாறு பதினைந்தாவதற்கு அறுபது பதினாறாவதற்கு அறுபத்து நான்கு பதினேழாவதற்கு அறுபத் தெட்டு ; பதினெட்டாவதற்கு எழுபத்திரண்டு; பத்தொன்பதா வதற்கு எழுபத்தாறு; இருபதாவதற்கு எண்பது ; இருபத் தொன்றாவதற்கு எண்பத்து நாலு ; இருபத்திரண்டாவதற்கு எண்பத்தெட்டு ; இருபத்து மூன்றாவதற்குத் தொண்ணூற்றி ரண்டு; இருபத்து நான்காவதற்கு தொண்ணூற்றாறு ; இருபத் தைந்தாவதற்கு நூறு; இருபத்தாறாவதற்கு நூற்றுநாலு.

2

இனி, அளவழிச் சந்தங்கட்குப் பெயர் சொல்லுமாறு: அளவழிச் சந்தங்களிற் சீர் ஒத்து ஓர் அடியுள் ஓர் எழுத்துக் குறைந்து வந்ததனை ‘நிசாத்து’ என்றும், இரண்டெழுத்துக் குறைந்து குறைந்து வந்ததனை விராட் ஈட்டு என்றும், ஓரெழுத்து மிக்கு வந்ததனைப் ‘புரிக்கு' என்றும், ரண்டெழுத்து மிக்கு வந்ததனைச் ‘சுராட்டு’ என்றும்;

1. “சந்த எழுத்தின் அரைகூட்ட – வந்தன

பாதத் தெழுத்தாம்; பரவையால் மாறவரும் ஏதாந்தீர் நான்கடிக்கும் எண்'

66

2. 'ஓரெழுத்துக் குன்றினனி சாத்தாம்; விராட்டாகும்

ஈரெழுத்துக் குன்றி னியமான · னேராப்போய்

ஓரெழுத்து மிக்க புரிக்காம்; சுராட்டென்ப ஈரெழுத்து மிக்க எனின்’

99

(மு. ப; இ.ப.)

- வீரசோ. 137. மேற்.