உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

கோலே இரு முழங்கை சாணே மூவிரல் ; பதினான்காவதற்கு முந்நூற்று நாற்பத்தொரு கோலே ஒரு முழமே ஏழு விரல்; பதினைந்தாவதற்குக் கூப்பீடே நூற்றெண்பத்திருகோலே இரு முழங்கை சாணே மூவிரல் ; பதினாறாவதற்கு இரண்டு கூப்பீடே முந்நூற்றறுபத்தைங் கோலே ஒரு முழமே ஏழு விரல் ; பதினேழாவதற்கு ஒரு காதமே ஒரு கூப்பீடே இருநூற்று முப்பதின் கோலே இரு முழங்கை சாணே மூவிரல்; பதினெட்டாவதற்கு இ ரு காதமே மே இரண்டு கூப்பீடே நானூற்றறுபத்தொரு கோலே ஒரு முழமே ஏழு விரல்; பத்தொன்பதாவதற்கு ஐங்காதமே ஒரு கூப்பீடே* நூற்று இருபத்திரு கோலே இரு முழங்கை சாணே மூவிரல்; ருபதாவதற்குப் பதின் காதமே மூன்று கூப்பீடே முந்நூற்று நாற்பத்தைங் கோலே ஒரு முழமே ஏழு விரல் ; இருபத் தொன்றாவதற்கு இருபத்தொரு காதமே மூன்று கூப்பீடே நூற்றுத்தொண்ணூறு கோலே இரு முழங்கை சாணே மூவிரல்; இருபத்திரண்டாவதற்கு நாற்பத்து மூன்று காதமே இரண்டு கூப்பீடே முந்நூற்றெண்பத்தொரு கோலே ஒரு முழமே ஏழு விரல்; இருபத்து மூன்றாவதற்கு எண்பத்தேழு காதமே ஒரு கூப்பீடே இருநூற்று அறுபத்திரு கோலே இரு முழங்கை சாணே மூவிரல். இருபத்து நான்காவதற்கு நூற்றெழுபத்து நான்கு காதமே மூன்று கூப்பீடே இருபத்தைங்கோலே முழமே ஏழு விரல்; இருபத்தைந்தாவதற்கு முந்நூற்று நாற் பத்தொன்பதின் காதமே இரண்டு கூப்பீடே *ஐம்பதின் கோலே இரு முழமேகைச் சாணே மூவிரல். 'உற்கிருதி' என்னும் இரு பத்தாறாவதற்கு அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பதின் காதமே நூற்றொரு கோலே ஒரு முழமே ஏழு விரல் எனக் கொள்க.

ஒரு

ரு

இனி, உத்தம் முதலாக உற்கிருதி ஈறாகக் கிடந்த விருத்தச் சந்தங்களின் எழுத்து வரையறுத்துச் சொல்லுமாறு:

ஓர் அடியுள் எழுத்து எண்ணி, அவற்றை நான்கினால் மாற, நான்கடிக்கும் எழுத்தாம் எனக் கொள்க.

66

(குறள் வெண்பா)

அடியுள் எழுத்தினை நான்கினால் அரைசெய்து முடியுமாம் நான்கடிக்கும் எண்'

அல்லது,

(பா. வே) *நானூற்று *பதின்கோலே.