உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

ஆறைந்தைந் தையே ழெனவுரைப்பர் மூவைந்து மேவிய பூமி விரல்"

"இரண்டுபாழ் மும்மூன்றேழ் ஏகமைந் தொன்றே

வருமிருபான் பூமி விரல்”

“ஒன்றுதீ நான்கிரண்டோ டொன்றேழ் முனியிரண்டேழ்

நற்கிருதிச் சந்த விரல்”

537

விரலைச் சாணும், முழமும், கோலும், கூப்பீடும் காதமும் செய்து சொல்லுமாறு:

66

(குறள் வெண்பா)

முந்நால் விரல்சாண் இரண்டுகை நான்குகோல் ஐஞ்ஞூறு கூப்பீ டளவு”

இதன் வழியே ஒட்டிக் கொள்க.

‘உற்கிருதி' என்னும் இருபத்தாறாம் சந்தத்தின் நில அளவை அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பதின் காதமும், நூற்றொருகோலும், ஒரு முழமும், ஏழு விரலும் எனக் கொள்க. (குறள் வெண்பா)

“ஏற்புடைய காதம் குறைந்த எழுநூறு நூற்றொருகோல் கைவிரல் ஏழு

பிறவும் இவ்வாறே நில அளவை கண்டு கொள்க.

இனி, உத்தம் முதலாக உற்கிருதி ஈறாகக் கிடந்த இருபத் தாறு சந்தங்கட்கும் முறையானே பிரத்தார நில அளவை

சொல்லுமாறு:

உத்தத்தின் விரல் அளவை மூவிரல்; இரண்டாவதன் விரல் அளவை ஏழு ; மூன்றவாதன் விரல் அளவை. சாணே மூவிரல் ; (இவை மூன்று சந்தமும் தமிழ்க்கு உரிய அல்லாதன) நான் காவதற்கு முழமே ஏழு விரல் ; ஐந்தாவதற்கு இரு முழங்கை சாணே மூவிரல் ; ஆறாவதற்கு ஒரு கோலே ஒரு முழமே ஏழு விரல் ; ஏழவாதற்கு இரு கோலே இரு முழங்கை சாணே மூவிரல்; எட்டாவதற்கு ஐங்கோலே ஒரு முழமே ஏழு விரல்; ஒன்பதா வதற்கு பதின்கோலே இருமுழங்கை சாணே மூவிரல்; பத்தா வதற்கு இருபத்தொரு கோலே ஒரு முழமே ஏழு விரல்; பதி னொன்றாவதற்கு நாற்பத்திரு கோலே இரு முழங்கை சாணே மூவிரல் ; பன்னிரண்டாவதற்கு எண்பத்தைங் கோலே ஒரு முழமே ஏழு விரல்; பதின்மூன்றாவதற்கு நூற்றெழுபதின்