உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஏழாவதன் நில அளவை விரல் இருநூற்று ஐம்பத்தைந்து ; எட்டாவதன் நில அளவை விரல் ஐந்நூற்றுப் பதினொன்று ; ஒன்பதாவதன் நில அளவை விரல் ஆயிரத்து இருபத்து மூன்று; பத்தாவதன் நில அளவை விரல் இரண்டாயிரத்து நாற்பத்தேழு; பதினொன்றாவதன் நில அளவை விரல் நாலாயிரத்துத் தொண் ணூற்றைந்து; பன்னிரண்டாவதன் நில அளவை விரல் எண்ணா யிரத்து நூற்றுத் தொண்ணூற்றொன்று ; பதின்மூன்றாவதன் நில அளவை விரல் பதினாயிரத்து முந்நூற்று எண்பத்து மூன்று; பதினாலாவதன் நில அளவை விரல் முப்பத்தீராயிரத்து எழு நூற்று அறுபத்தேழு; பதினைந்தாவதன் நில அளவை விரல் அறுபத்தையாயிரத்து ஐந்நூற்று முப்பத்தைந்து ; பதினாறாவதன் நில அளவை விரல் லட்சத்து முப்பத்தோராயிரத்து எழுபத் தொன்று; பதினேழாவதன் நில அளவைவிரல் இரண்டு லட்சத்து அறுபத்தீராயிரத்து நூற்று நாற்பத்து மூன்று ; பதினெட்டாவதன் நில அளவை விரல் ஐந்து லட்சத்து இருபத்து நாலாயிரத்து இருநூற்று எண்பத்தேழு; பத்தொன்ப தாவதன் நில அளவை வ விரல் பத்து லட்சத்து நாற்பத் தெண்ணாயிரத்து ஐந்நூற்று எழுபத்தைந்து; இருபதாம் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் இருபது லட்சத்துத் தொண் ணூற்றேழாயிரத்து நூற்று ஐம்பத்தொன்று; இருபத்தோராஞ் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் நாற்பத்தொரு லட்சத்துத் தொண்ணூற்று நாலாயிரத்து முந்நூற்று மூன்று; இருபத்திரண்டாம் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் எண்பத்து மூன்று லட்சத்து எண்பத்தெண்ணாயிரத்து அறு நூற்றேழு; இருபத்து மூன்றாஞ் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் ஒரு கோடியே அறுபத்தேழு லட்சத்து எழுபத் தேழாயிரத்து இரு நூற்றுப் பதினைந்து; இருபத்து நாலாம் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் மூன்று கோடியே முப்பத்தைந்து லட்சத்து ஐம்பத்து நாலாயிரத்து நானூற்று முப்பத்தொன்று ; இருபத்தைந்தாவது சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் ஆறு கோடியே எழுபத்தொரு லட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்று அறுபத்து மூன்று; ‘உற்கிருதி என்னும் இருபத்தாறாம் சந்தத்தின் பிரத்தார நில அளவை விரல் பதின்மூன்று கோடியே நாற்பத்திரண்டு லட்சத்துப் பதி னேழாயிரத்து எழுநூற்று இருபத்தேழு.

இவை உத்தம் முதல் உற்கிரதி ஈறாகிய சம விருத்தங்களது பிரத்தார நில அளவை விரல்; முறையானே கண்டு கொள்க. (குறள் வெண்பா)

“இராயிரத்து நாற்பத்தே ழென்றுரைப்பர் பத்து விராயதற்குச் சொன்ன விரல்