உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

535

இது பிரத்தார எண்களின் தொகை, “உத்தம்” என்னும் ஓரெழுத்துச் சந்தம் முதலாக, ‘உற்கருதி' என்னும் 2இருபத்தாறு எழுத்துச் சந்தத்தளவும் முறையானே கண்டுகொள்க.

பிரத்தரித்து நின்ற சந்தத்தினுள் இரண்டு களைய, அதன் கீழ்ப் போன சந்தம் எல்லாவற்றிற்கும் தொகையாம்.

னி, விரல் அளவு சொல்லுமாறு:

(குறள் வெண்பா)

“பிரத்தார எண்ணிரட்டித் தொன்று களைய

விரற்களவை யாகி விடும்'

99

“ஆதி இரட்டித் ததனகத் தொன்றிடினும் வேறுபா டில்லை விரல்”

66

வீரசோ. 137. மேற்.

66

ஒருபடி நீக்கி ஒழிந்த தரைசெய்தால் ஆதி யதற்கு விரல்

(நேரிசை வெண்பா)

'மூன்றேழு மூவைந்து முப்பதின்மேல் ஓருருவு மூன்றுடை மூவிருபான் ஒன்றிரண்டேழ்- தோன்ற இரட்டித்தாங் கோருருவிட் டெண்ணுவான் காணும் விரற்றொகையா நின்ற விரி”

வீரசோ. 137. மேற்.

முதல் விருத்தத்தின் பிரத்தார நில அளவை விரல் மூன்று; இரண்டாவதன் நில அளவை விரல் ஏழு; மூன்றாவதன் நில அளவை விரல் பதினைந்து ; நாலாவதன் நில அளவை விரல் முப்பத்தொன்று; ஐந்தாவதன் நில அளவை விரல் அறுபத்து மூன்று ; ஆறாவதன் நில அளவை விரல் நூற்றிருபத்தேழு;

1.

உத்தமாவது ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய்யாவது பாதம் ஒன்றற்கு ஓரெழுத்தாய் வருவது. மற்றைய நிரலே ஒவ்வொன்றற்கு ஓரெழுத்தாய்க் கூடி ஈற்றின் நின்ற உற்கிருதிபாதம் ஒன்றற்கு இருபத்தாறெழுத்துப் பெற்று முடியும்.

(எ.டு) உத்தம் : கார், நேர், வார், யார்.

அதியுத்தம்: போதி, யாதி, பாத, மோது.

மத்திமம்: வேரம்போய், மாரன்சீர், சேருங்கால், நேர்வன்யான், பிற ஆண்டுக் காண்க. 2. 'உத்தம்' முதலிய இருபத்தாறு சந்தங்களின் பெயர்கள்; 1. உத்தம். 2. அதியுத்தம். 3. மத்திமம். 4. நிலை. 5. நன்னிலை. 6. காயத்திரி. 7. உண்டி. 8. அனுட்டுப்பு. 9. பகுதி. 10. பந்தி. 11. வனப்பு. 12. சயதி. 13. அதிசயதி. 14. சக்குவரி. 15. அதிசக்குவர். 16. ஆடி. 17. அதியாடி 18. திருதி. 19. அதிதிருதி. 20. கிருதி. 21. பிரகிருதி. 22. அதிகிருதி. 23. விக்கிருதி. 24. சங்கிருதி. 25. அபிகிருதி. 26. உற்கிருதி.

- வீரசோ. 137.