உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(குறள் வெண்பா)

‘உருவுபா ழென்பரவை யோரெட்டைந் தேழா

றிருபதாம் சந்தத்தின் எண்'

99

ருபதாம் சந்தத்திற்குத் தொகை, பத்து லட்சத்து நாற்பத் தெண்ணாயிர்த்து ஐஞ்ஞூற்று எழுபத்தாறு.

66

(குறள் வெண்பா)

ஆறேழ் உருஷ்பாழ் எட்டோடு மங்கலமாம்

ஆறோடுநான் குற்கிருதிக் காம்’

இருபத்தாறாம் சந்தத்திற்குத் தொகை, ஆறு கோடியே எழுபத் தொரு லட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்று அறுபத்து நாலு.

66

(குறள் வெண்பா)

ஏற இரட்டித் திழிய அரைசெய்து

கூறுக தேறும் பொருள்”

உத்தம்' என்னும் ஒரெழுத்து முதற் சந்தத்திற்குப் பிரத்தார எண்தொகை 2; இரண்டாம் சந்தத்திற்கு 4; மூன்றாம் சந்தத்திற்கு 8; நாலாம் சந்தத்திற்கு 16; ஐந்தாம் சந்தத்திற்கு 32; ஆறாம் சந்தத்திற்கு 64; ஏழாம் சந்தத்திற்கு 128; எட்டாம் சந்தத்திற்கு 256; ஒன்பதாம் சந்தத்திற்கு 512; பத்தாம் சந்தத்திற்கு 1,024; பதினோராம் சந்தத்திற்கு 2,048; பன்னிரண்டாம் சந்தத்திற்கு 4,096; பதின்மூன்றாம் சந்தத்திற்கு 8,192; பதினான்காம் சந்தத்திற்கு 16, 384; பதினைந்தாம் சந்தத்திற்கு 32,768; பதினாறாம் சந்தத்திற்கு 65,536; பதினேழாம் சந்தத்திற்கு 131, 072; பதினெட்டாம் சந்தத்திற்கு 262, 144; பத்தொன்பதாம் சந்தத்திற்கு 524,288; இருபதாம் சந்தத்திற்கு 10, 48, 576; இருபத்தோராம் சந்தத்திற்கு 20, 97,152; இருபத்திரண்டாம் சந்தத்திற்கு 41,94,304; இருபத்து மூன்றாம் சந்தத்திற்கு 83,88,608; இருபத்துநான்காம் சந்தத்திற்கு 1,67,77,216; இருபத்தைந்தாம் சந்தத்திற்கு 3,35,54,432; ‘உற்கிருதி’ என்னும் இருபத்தாறாம் சந்தத்திற்குப் பிரத்தார அடித்தொகை, 6,71,08,864;