உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

533

உறழ்ச்சி இரு வகைப்படும்: முற்றக் குருவே வைத்து உறழ்தலும், முற்ற இலகுவே வைத்து உறழ்தலும் என.

அவற்றுள் முற்றக் குருவே வைத்து உறழுமாறு:

(குறள் வெண்பா)

"குருக்கீழ் இலகுவாம் ஏனைய ஒப்பாம் குருத்தொகையாம் ஆதிக்கட் கூறு”

எனக் கொள்க.

பிரத்தாரம் செய்தற்கு இலக்கணம்.

(குறள் வெண்பா)

1““ஈறு வருக்கித் திழித்திரட்டித் தன்றவற்றான் மாறியுய்த் திங்ஙனே வைத்து

எனவும்,

266

“ஆர்த்த படியினெதி ரச்சுன் வருமாயிற் பேர்த்திருகால் வைக்க பெரிது”

எனவும் கொள்க.

யா. வி. பக். 508.

(நேரிசை வெண்பா)

66

இரண்டுநான் கெட்டுப் பதினாறு முப்பத்

உற்கிருதி காறும் உலையா முறைமையால்

திரண்டொடறு பத்துநான் கென்றாங்- கிரட்டித்தே

நற்குரைப்பான் நாவலனா வான்”

- வீரசோ. 187. மேற்.

"ஒன்றாதி என்றார் வடபுலவோர் சந்தங்கட் கென்றார் இருமூன் றெழுத்தாதி - தென்றமிழாற் சீரிரண்டாம் என்றுரைத்தார் எல்லாரும் மேன்மூன்றோ டோரிரண்டாம் என்றார் உயர்வு”

“ஈரைஞ்ஞூற் றெண்மூன்றாம் என்பர் பிரத்தரித்தால் ஈரைந்தாம் சந்தத்திற் கெண்’

""

- (குறள் வெண்பா)

வீரசோ. 137. மேற்.

பத்தாம் சந்தத்திற்கு எண், ஆயிரத்து இருபத்து நான்கு என்றவாறு.

(குறள் வெண்பா)

“மதிலிரண்டு மாவாறு வாய்ந்த வசுக்கள்

பதினைந்தாம் சந்தப் பரப்பு

வீரசோ. 137. மேற்.

பதினைந்தாம் சந்தத்திற்குத் தொகை, முப்பத்தீராயிரத்து

எழுநூற்று அறுபத்தெட்டு.

1,2. இவற்றின் சரியான பாடம் கிடைக்கவில்லை. (மு. ப; இ.ப)