உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அதற்கு இலக்கணம்.

(கலி விருத்தம்)

“பெருக்கிய வாறு பிரத்தரித் தாங்கட்

டருக்கிய நாவலர் சந்தத் தரணி இரட்டித் ததனந்தத் தொன்று களைய விரற்கள வாமென்று வேண்டுவர் தாமே

(நேரிசை வெண்பா)

"நாலிருசாண் கொண்டத நற்கோலாம்; ஐந்நூறு

கோலியைந்த நீளம் குரோசமே ;- நாலு குரோசமோர் காவதமாம் ;- குன்றாத சாணும் விரோதந்தீர் முந்நால் விரல்

(குறள் வெண்பா)

"முந்நால் விரற்சாண் இரண்டுகை நான்குகோல்

ஐஞ்ஞூறு கூப்பீ டளவு”

(நேரிசை வெண்பா)

“பரமாணுத் தேர்த்துகள் பஞ்சித்துய் எஞ்சா மயிர்மணல் 'ஐயவி எண்ணெல்-அ விரலளவும்

எட்டெட்டா ஏறும் எழில்விரல் ஆதியா

ஒட்டினவும் நூன்முறையால் ஒட்டு

(குறள் வெண்பா)

“படையொடுதீ நீர்வளியாற் பங்கப் படாத

முடிபொருள் முந்தை அணு

இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

(நேரிசை வெண்பா)

“உறழ்ச்சிகே டுத்திட்டம் ஒன்றிரண்டென் றேத்தித் திறப்படுத்த திண்ணிலகுச் செய்கை - சிறப்பித்தாங் கெண்ணி நிலவளவோ டேய்ந்த இருமூன்றே திண்ணியோர் கண்ட தெளிவு

இது சமவிருத்தங்கட்கு ஆறு பிரத்தியமும் சொன்னவாறு.

இனி, ஒருசார் ஆசிரியர், உறழ்ச்சி நில அளவுகளை

விகற்பித்துச் சொல்லுமாறு.

1. கடுகு, எள், நெல்.