உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

இன்னதனை இலகு, இன்னதனை வரையறுத்துக் கூறுமாறு.

மாத்திரை என்

531

று

ஒரு விருத்தத்தினைப் பிரத்தார முறையால் உறழ்ந்து பெற்ற விருத்தங்களைத் திரட்டி ஐந்து படி வைத்து, முதற்படி ஒழித்து ஒழிந்த நான்கு படியினையும் விருத்தத்து ஓரடியுள் எழுத்து எண்ணிக்கொண்டு அவ்வெழுத்துக்களால் மாற, மூன்றாம் படியினையும் நான்காம் படியினையும் அரை செய்து, முடிவிற் படியில் அதன் பாதம் ஒரு பத்திரமாகக் கூட்டினால், முதற்படி, விருத்தங்களது அளவையாம்: இரண்டாம் படி, எழுத்துக்களது அளவையாம்; மூன்றாம் படியும் நான்காம் படியும், குரு இலகுகளது அளவையாம்; ஐந்தாம் படி, மாத்திரைகளது அளவையாம்.

அதற்கு இலக்கணம்:

(இன்னிசை வெண்பா) “விருத்த *விருத்தியினை வேறைந்தா நாட்டி விருத்த அடியெழுத்தால் மாறி- அருத்திக்க மூன்றொடு நான்காய குப்பை ஒருக்கதன் பாதியுடன் வைக்கமே லே”

“விருத்த *விருத்தியதன் வீவில் எழுத்துக் குருக்களோ டேனைக் குறைவில் இலகு வருக்கத்தின் மாத்திரை என்றிவை ஐந்தும் விகற்பித்து வேண்டப் படும்

- வீரசோ. 136. மேற்.

- வீரசோ. 136. மேற்.

னி, பிரத்தரித்த விருத்தங்களது விரலளவை கூறுமாறு:

  • விரித்த அப்பிரத்தார விருத்தங்களை விருத்தங்களை இரட்டித்து

ஒன்றுகளைய, விரல் அளவையாம்.

(குறள் வெண்பா)

“பிரத்தார எண்ணிரட்டித் தொன்று களைய விரற்களவை யாகி விடும்’

என்றாராகலின்.

கொண்டது சாணாம். சாண்

அவ்விரல் பன்னிரண்டு கொண்ட இரண்டு கொண்டது முழமாம். முழம் நான்கு கொண்டது து கோலாம். கோல் ஐஞ்ஞூறு கொண்டது கூப்பீடாம். கூப்பீடு நான்கு கொண்டது காதமாம். இவ்வாறு வகுத்துப் பிழையாமற் கூறுக.

(பா. வே) *வடியினை. *விதியதனை. *விருத்தப்பிரத்தார.