உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(20)

காதியான் அருளிய கதிர்முடி கவித்தாண்டான் மருகன் கண்டாய் ஓதியான் உரைப்பினும் இவன்வலிக்கு நிகராவார் உளரோ வேந்தர்" (21) சூளாமணி. 250

இது முதலடி பத்தொன்பது எழுத்தாயும், இரண்டாமடி இருபத்திரண்டு எழுத்தாயும், மூன்றாமடி இருபது எழுத்தாயும், நான்காம் அடி இருபத்தோ ரெழுத்தாயும் வந்தமையால், அளவழிப்பையுட்சந்தம்.

(கலி விருத்தம்)

“மணிமலர்ந் துமிழ்தரும் ஒளியும் சந்தனத் துணிமலர்ந் துமிழ்தரும் தண்மைத் தோற்றமும் அணிமலர் நாற்றமும் என்ன அன்னவால் அணிவரு சிவகதி அடைவ தின்பமே

(14)

(13)

(12)

(14)

சூளாமணி. 2075.

டையடி

இது முதலடியும் முடிவடியும் பதினாலெழுத்தாய், இடை ரண்டும் பதின்மூன்றும் பன்னிரண்டுமாய், எழுத்து ஒவ்வாது வந்தமையால், அளவழிப் பையுட்சந்தம். இதனை எறுப் பிடைச் சந்தச் செய்யுள் என்பாரும் உளர்.

(அறுசீர் விருத்தம்)

“செஞ்சுடர்க் கடவுட் டிண்டேர் இவுளிகால் திவள வூன்றும் மஞ்சுடை *மகர்வை நெற்றி *வானுழு வாயில் மாடத் தஞ்சுடர் இஞ்சி ஆங்கோர் அகழணிந் தலர்ந்த தோற்றம் வெஞ்சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீதிட் டன்றே

(17)

(15)

(16)

(15)

சூளாமணி. 38.

இதுவும் முதலடி பதினேழெழுத்தாய், இரண்டாமடியும் நான்காமடியும் பதினைந்தெழுத்தாய், மூன்றாமடி பதினா றெழுத்தாய் வந்தமையால், அளவழிப் பையுட் சந்தம். இதனைப் பாதிச் சமப் பையுட் சந்தம் என்பாரும் உளர்.

(அறுசீர் விருத்தம்)

“என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவர் என்று

(15)

(17)

(16)

கன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ணன் வினவ யாரும் சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க ஆங்கோர் கொன்னவில் பூதம் போலும்*குறண்மகன் இதனைச் சொன்னான்” (16)

(பா. வே) மதர்வை. வானுரு. குறமகள்.

சூளாமணி. 679.