உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது முதலடி முதலடி

யாப்பருங்கலம்

545

பதினைந்தெழுத்தாய், இரண்டாமடி பதினேழெழுத்தாய்ப் பின் இரண்டடியும் பதினாறெழுத்தாய் வந்தமையால், அளவழிச் சந்தப் பையுள்.

பிறவும் இவ்வாறு வருவனவற்றை எல்லாம் வந்த வகையாற்

பெயர் கொடுத்து வழங்குக.

66

என்னை?

"வந்த முறையாற் பெயர்கொடுத் தெல்லாம் தந்தம் முறையால் தழாஅல் வேண்டும்" என்பது இலக்கணமாகலின்.

66

தாண்டகமும் இவ்வாறே கொள்க. ஒன்றென முடித்தலென்,

றின்ன வகையால் யாவையும் முடியும்”

என்பவாகலின்.

குமரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர் கோவையும் யாப்பருங்கலக் காரிகையும் போன்ற சந்தத் தால் வருவனவற்றின் 'முதற்கண் நிரையசைவரின், ஓரடி பதினேழெழுத்தாம்; முதற்கண் நேரசை வரின் ஓரடி பதி னாறெழுத்தாம். இவ்வாறன்றி மிக்கும் குறைந்தும் வாரா. அவை எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழித்து, உயிரும் யிர்மெய்யும் குற்றியலிகரமும் கொண்டு எண்ணப்படும்.

66

என்னை?

(நேரிசை வெண்பா)

"எழுவாய் நிரைவரினாம் ஏழுடைய ஈரைந் தெழுவாய் தனிவரினொன் றெஞ்சும் -வழுவாத கோவையும் செய்யுட்கால் குன்றா பெருகாவென் றேவினார் தொல்லோர் *எழுத்து”

என்பவாகலின்.

1.

66

அவற்றுட் சில வருமாறு:

(கட்டளைக் கலித்துறை)

“இருநெடுஞ் செஞ்சுடர் எஃகமொன் றேந்தி இரவின்வந்த அருநெடுங் காதற்கன் றேதரற் பாலதல் லாதுவிட்டாற் கருநெடு மால்கடல் ஏந்திய கோன்கயல் சூடுநெற்றிப்

66

“அடியடி தோறும் ஐஞ்சீர் ஆகி

முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக்

கடையொரு சீரும் விளங்காய் ஆகி

நேர்பதி னாறே நிரைபதி னேழென்

றோதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே" (பா. வே) *எடுத்து.

ம்